மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

பெண்ணுலகம்

பெண்ணிய இயக்கம் எனக்குத் துரோகம் இழைத்து விட்டது!
கவிஞர் Dr.அம்ரின் கலீல் MBBS, 16 - 31 டிசம்பர் 2024




அம்ரின் கலீல் ‘தேசி பிலிட்ஸ்’ என்ற பத்திரிகையால் 2023ஆம் ஆண்டிற்கான தெற்காசியாவின் முதல் ஏழு பெண் கவிஞர்களுள் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். அவர் MBBS மருத்துவரும் கவிஞரும் ஆவார். எழுதுவதில் சிறு வயது முதலே ஆர்வமுடையவர். தனது பதின்மூன்றாவது வயதில் Black fury என்கிற முன்னூறு பக்க ஃபேண்டஸி நாவலை Zeeta sherin என்கிற புனைப்பெயரில் எழுதி வெளியிட்டவர். இவருடைய amrinkhalilpoetry என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்கின்றார்கள். அவருடைய கவிதைகள் வெள்ளையரல்லாத நிறமுடைய பெண்களின் போராட்டங்களையும் சமூக நீதியையும் கலாச்சாரத்தையும் நம்பிக்கையையும் அடையாளத்தையும் சுயமரியாதையையும் மனநலத்தையும் அடிக்கடி பேசும். ஐரோப்பாவை மையப்படுத்திய அழகுக்கான ஒரே தன்மைத்தான படித்தரங்களை (Eurocentric beauty standard) உடைத்தெறியும்.

கவிஞர் தண்ணன் மூஸா இவரது தகப்பனாரான டாக்டர் கலீல் அவர்களின் சிற்றப்பா ஆவார். பன்னூலாசிரியர் எம்.ஆர்.எம்.அப்துற் றஹீம் இவரது தந்தை வழி பெரிய தாத்தா. எழுத்தாளர் இளம்பிறை அப்துர் ரஹ்மான் இவரது தாயாரான அஜீமா வழி பெரிய தாத்தா ஆவார். அம்ரின் கலீல் Empower என்கிற இணைய இதழுக்கு அளித்த நேர்காணல்.

எழுத்தார்வமும் கவிதையார்வமும் வரக் காரணம் என்ன? எப்போதிருந்து எழுதுகிறீர்கள்?

‘நான் சிறுமியாக இருந்த காலத்திலிருந்தே எழுதுகிறேன். அபோது நான் நல்ல கதை சொல்லியாக இருந்தேன். ஆனால் பருவ வயதை அடைந்த பின் கவிதை வழியே மிக கனமான பொருளையும் ஒரு சில சொற்களிலேயே சொல்லமுடிந்ததால் கவிதை எழுத ஆரம்பித்துவிட்டேன். சொல்லத் தயங்குகின்ற விஷயங்களைக் கூட கவிதை எனும் ஆபரணம் போர்த்திச் சொல்லிவிடலாம். எனக்குக் கவிதையில் பெரும் சுதந்திரம் இருக்கிறது. கவிதை வாசிப்பவருக்குச் சொந்தமாகி விடுகிறது. அவர் அதனை அவர் சிந்தனைப்படி பிரித்துரைக்கவும் விரித்துரைக்கவும் முடியும். அந்தக் கவிதையைத் தீண்டுவோரிடம் எல்லாம் அது தன் தடத்தைப் பதித்து அந்த உணர்வுகளைச் சுமந்து கொண்டிருந்த எனக்கு விடுதலை அளிக்கிறது.

உங்கள் கவிதைகள் பல இளம் பெண்களுக்கு ஆறுதலாகவும் அதே சமயம் பலமளிப்பதாகவும்  இருக்கிறது. வலிமையான, நம்பத்தகுந்த, உரத்துக் குரல் கொடுக்கிற ஓர் இளம் பெண்ணாக உங்களைச் செதுக்கியது எது?

எனது அனுபவங்களில் இருந்தும் என்னைச் சுற்றி இருக்கிற பெண்கள் தங்கள் எதார்த்தங்களைப் பகிரும் போதும் கிடைக்கிற உணர்விலிருந்தும் நான் உந்துதல் பெறுகிறேன். என் குருதியைக் கொதிக்கச் செய் யும் உண்மைகளை எழுதுவதில் நம்பிக்கை கொண்டுள்ளேன். கசப்பான உண்மைகளை என் கவிதை வரிகளுக்கிடையே செருகிவிடுகிறேன். எனது பெரும்பாலான எழுத்துகள் எனது சிந்தனையையும் உணர்வுகளையும் தர்க்க ரீதியாகப் பகுத்தும் தொகுத்தும் தரும் முயற்சியாகும். நான் எழுத ஆரம்பித்த சமயத்தை விட இப்போது துணிவு பெற்றுள்ளேன். ஆனால் இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம்.

பெண்ணியம் பற்றி என்ன கருதுகிறீர்கள்?

பெண்ணியம் அதன் அசல் பொருளில் இருந்து நீர்த்துப் போய்விட்டது. ஆண்களாலும் பெண்களாலும் அது ஆயுதம் ஆக்கப்பட்டுவிட்டது. பெண்ணிய இயக்கம் எனக்குத் துரோகம் இழைத்து விட்டதாக உணர்கிறேன். என் மக்களைக் கைவிட்டு விட்டதாகக் கருதுகிறேன். உங்கள் பெண்ணிய சித்தாந்தம் முஸ்லிம் பெண்களை, ஹிஜாப் அணிந்த பெண்களை, இலத்தரசிகளாக இருக்க விரும்பும் பெண்களை, தாய் மார்களை, வெள்ளையரல்லாத பிற நிறப் பெண்களை, ஃபலஸ்தீனப் பெண்களை, நீங்கள் செய் வதில் நம்பிக்கையில்லாத நீங்கள் செய் வதையே செய் ய விரும்பாத பெண்களைப் பின்னுக்கு விட்டுவிடுகிறதென்றால் அது பெண்ணியமே அல்ல!


உங்கள் மத சமூகத்துடனான வலுவான தொடர்பும் இறைவனே உங்கள் நம்பிகையையும் பலத்தையும் வார்த்தெடுத்தான் என்கிற ஆன்மிகப் பார்வை பற்றியும் எவ்வாறு உணர்கிறீர்கள்? உங்கள் பார்வையில் மதமும் சமூகமும் ஒருவரது வாழ்க் கையில் என்ன பங்கு வகிக்கிறது?


எனக்கு எனது இறைநம்பிக்கை தான் எல்லாமும். அனைத்திற்கும் முன் நான் இறைவனின் அடிமை. இறைநம்பிக்கையின் பாதை என்பது எளிதானதோ மேடு பள்ளம் இல்லாததோ அல்ல. எனது மதம் இடையறாது தவறாகப் புரிந்து கொள்ளப்படு வதாகவும் தவறாகச் சித்திரிக்கப்படுவதாகவும் இருக்கிறது. இஸ்லாத்தின் அழகின் பக்கம் மக்களின் பார்வையை ஈர்ப்பதற்கு எனது அண்மைக்கால ஆக்கங்களில் முயன்றிருக்கிறேன். உண்மையில் சமூகம் உங்கள் ஒழுக்கப் பண்பாடுகளை வார்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நம்மைச் சுற்றி யாரை வைத்துக் கொள்கிறோம் என்பது மிக முக்கியம். ஒருவர் மற்றவர் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாகச் செய் யப்படும் செயல்களைப் பார்க்கின்ற போதும் நம்மிடையே இருக்கின்ற பொதுவான சோகங்களையும் நம்பிக்கைகளையும் பகிர்ந்து கொள்கிற வரலாறுகளையும் மரபுகளையும் காண்கிற போதும் சில சமயங்களில் கண்ணீர் வடிக்கிறேன். நம் கிளைகள் எத்தனை வளர்ந்து உயர்ந்தாலும் நம் வேர்களைப் பற்றிப் பிடித்திருப்பது மிக முக்கியம்.


உங்கள் சுயமரியாதை பற்றிய கருத்துகள் அதில் சந்தித்த பிரச்னைகள் முற்கோள்கள் பற்றி!

கடினமான பாதைதான். இன்றும் போராட்டம் நீடிக்கிறது. இவை மேடு பள்ளங்களற்ற நேர்கோட்டில் பயணிக்கிற பாதையல்ல. சில நாள்களில் நம்மிடம் பலம் இருக்கும். சில நாள்களில் நம் மீதே நமக்கு ஐயம் வந்து நம்மை வீழ்த்திவிடும். முத்திரை குத்தப்படுதல் எல்லாப் பக்கங்களில் இருந்தும் எல்லா நேரங்களிலும் நடந்திருக்கிறது. பல தடைகளை உடைத்தெறிந்து தான் இன்று இங்கே நிற்கிறேன். ஹிஜாப் அணிந்த பெண்ணாக மறுபடி மறுபடி எனது ஹிஜாபுக்கு விளக்கம் அளித்து வாதிட வேண்டியுள்ளது.

சில சமயம் நான் சுருங்கிப் போகிறேன். சில சமயம் வேற்று மனுஷியாகக் கருதப்படுவதால் ஆயாசம் அடைந்து சோர்ந்து போகிறேன். ஒரு மருத்துவராக எனது சமூகத்தில் இருந்தே நான் சந்திக்கும் சவால்களாக இருப்பவை இஸ்லாத்திற்குத் தவறான விளக்கங்களால் அவர்கள் வைக்கும் பெண்கள் பற்றிய அடக்குமுறையான பார்வை. ஒரே சமயத்தில் இரண்டு முனைகளில் இருந்து தாக்குதலைச் சந்திக்க வேண்டி யுள்ளது. வாய் ப்புக்கேடாக இன்றளவும் அதைச் சந்திக்க வேண்டியுள்ளது. நான் எனது பெற்றோர்களுக்கு நன்றியுடையவளாக இருக்கிறேன். அவர்கள் எனக்கு மார்க்க அறிவையும் உலக அறிவையும் சேர்த்தே தந்தார்கள். அதனால் என்னை தற்காத்துக் கொள்ள கருத்தாயுதம் பெற்றிருக்கிறேன்.


ஒரு மருத்துவராகவும், கவிஞராகவும் இருப்பது எவ்வாறு உங்கள் வாழ்க்கைக்குப் பொலிவு சேர்த்திருக்கிறது? மருத்துவ அறிவிய லையும் கவிக் கலையையும் எப்படி ஒருங்கே கையாண்டீர்கள்? ஏன் மருத்துவத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

நான் மருத்துவம் பயில விரும்பியதாலும் பொதுவாக மருத்துவக் கல்வியே உயர்ந்தது என்று சமூகத்தில் நிலவிய கருத்தாலும் முஸ்லிம் மடந்தையாக நீ ஒருவருக்கு மனைவியாவதற்காகவே பிறந்தவள் என்று சமூகத்தில் நிலவிய கருத்துச் சூழலில் நான் யாராக அறியப்படவேண்டும் என்பதாலும் நான் மருத்துவத்தை தேர்ந்தெடுத்தேன். என்னிடம் ஆற்றலும் உழைப்பும் இருப்பதைக் கண்ட என் பெற்றோர்கள் அதில் எனக்கு உறுதுணையாக இருந்தனர். அறுவை சிகிச்சை நிபுணரனான எனது தந்தையை நான் நேசிக்கவும் மரியாதையோடு பார்க்கவும் செய் கிறேன். அவரைப் போல ஆக நினைத்தேன்.

மருத்துவத்துறை என்பது சில சமயம் மிகவும் விருப்பத்திற்கு உரியதாகவும் சில சமயம் ஏன் தேர்ந்தெடுத்தோம் என நினைக்கத் தோன்றும் ஒரு துறை. சில நாள்கள் முழு மனநிறைவோடு குதூகலமாக வீடு திரும்புவேன். சில நாள்கள் உடைந்து நொறுங்கிப் போய் சொல்லொணாத் துயரத்தோடு வீடு திரும்புவேன். எப்போதும்  இறைவன் உங்களைச் சரியான பணிக்கே தேர்ந்தெடுக்கிறான். நான் விரும்பியே என் வேலையைச் செய் கிறேன். சில பொழுதுகள் மிகவும் சிரமமாகும்போது நான் ‘எவர் ஒருவர் ஓர் உயிரைக் காப்பாற்றினாரோ அவர் மனிதகுலம் முழுவதையும் காப்பாற்றியவர் ஆவார்’ என்ற குர்ஆன் வசனத்தை நினைவுபடுத்திக் கொள் வேன். வேறு எந்தத் துறையையும் என்னால் கற்பனை செய் து பார்க்கவும் முடியவில்லை. மற்றொருவரின் உயிரைக் காப்பாற்றப் போராடுவது என்பது எத்தனை பெருமைக்கு உரிய விஷயம். எனது மருத்துவ உலகம் என் கவிதை உணர்வோடு தொடர்புடையதாக இருக்கிறது.

மருத்துவம் என்பது ஏதோ அறிவோடு மட்டும் தொடர்புடையது அல்ல. அது பரிவுணர்வு, ஆலோசனை வழங்குதல், மனிதர்களோடு தொடர்பு, சரியான வார்த்தையைத் தேர்ந்தெடுத்தல், பல உணர்வுகளின் கலவையான பரிணாமங்களைக் கொண்டதாக இருக்கிறது. ஐயத்திற்கு இடமின்றி இவையெல்லாம் எனது கலையாக மடைமாற்றம் அடைகிறது. சில சமயம் ஊக்குவிக்கும் சக்தியாகவும் திகழ்கிறது. ஆனால் மருத்துவக் கல்லூரியின் அதிலும் அரசு மருத்துவத் துறையில் பரபரப்புமிகு வேலைப்பளு நம்முடைய படைப்புத் திறனுக்கு பெரிய சவால்தான். வேலை முடித்து பிழைத்துக் கிடந்தால் போதும் என்ற நிலைக்குக் கொண்டு வந்துவிடும். இப்போது நான் பட்டம் பெற்றுவிட்டதால் அதிகம் எழுத முடியும் என நினைக்கிறேன்.

அண்மைக்கால இந்திய அரசியல் சூழலில் வகுப்புவாதிகளின் கை ஓங்கியிருக்கிறது. இதைப் பற்றி உங்கள் உணர்வு என்ன? மறுபடியும் நல்லிணக்கமும் வகுப்பு ஒற்றுமையும் கொண்ட இந்தியாவாக மாற என்ன சீர்பட வேண்டும் என நினைக்கிறீர்கள்?

ஆம்! அண்மைக்கால இந்திய அரசியல் சூழல் அச்சமூட்டக்கூடியதாக இருக்கிறது. மக்களை மேலும் பிளவுபடுத்தி இருக்கிறது. வெறுப்புப் பரப்புரை மிகப் பலமாக நடக்கிறது. நாட்டின் இந்த நிலையைச் சீர்செய் ய என்ன செய்வது?

இளைஞர்கள்  இளைஞிகள்தான் நம்பிக்கை. புதிய தலைமுறை வாக்காளர்கள் கருத்துள்ளவர்களாக இருக்கிறார்கள். காழ்ப்பு உணர்வு குறைந்தவர்களாக இருக்கிறார்கள். இந்த நாடு மீட்சி பெற பிரார்த்திக்கிறேன். நம்மிடமிருந்து ஆன்மா பிரிந்துவிட்டால் நம்மை வேறுபடுத்திக்காட்ட ஒன்றுமில்லை. பெருநாளன்று பிரியாணி கொடுப்பதையும் தீபாவளி அன்று இனிப்புகள் பெற்றுக் கொள்வதையும் தொடர்வேன். நாம் ஒருவர் மற்றவரை உயர்த்தியும் பிடிப்போம், கீழே இழுத்தும் விடுவோம். ஆனால் ஒருவர் மற்றவரின் நம்பிக்கைக்கு மதிப்பும் கண்ணியமும் அளிப்போம்.


இந்தியாவில் இளம் பெண்கள் சந்திக்கும் மிகப் பெரிய சவால் எது? தன் முழு ஆற்றலை உணரத்தகுந்த திருப்திகரமான சூழலோ ஒத்துழைப்போ கிடைக்கவில்லை என உணரும் இளம் பெண்களுக்கு நீங்கள் அளிக்க விரும்பும் ஊக்கம் என்ன?


பெரும்பாலும் நம் குடும்பங்களும் சமூகமும்தான் நம்மைத் தடுத்து வைக்கிறது. குறுகிய மனங்களுக்குள் உங்களைப் பொருத்திக்கொள்ள நீங்கள் உங்களைச் சுருக்கிக் கொள்ளத் தேவையில்லை. பலர் ஊக்கம் குன்றிப் போகவும் ஏளனம் புரியவும் செய் வார்கள். அதனையெல்லாம் கண்டு öகாள்ளாமல் உங்கள் கனவுகளின் ஏணியில் மேலே செல்வதற்குத் தொடர்ந்து பாடுபடுங்கள். உங்கள் சின்ன இலட்சியங்களில் முதலில் வெற்றி பெறுங்கள். உங்களுக்கு வெளிஉதவி தேவைப்படும் பெரிய இலட்சியங்களைத் துரத்திப் பிடிக்க இந்தச் சிறிய வெற்றிகளின் ஆதாரம் பிறர் ஒத்துழைப்பைப் பெறுவதற்குப் போதிய சான்றாக அமையும். ஒரு நாள் நீங்கள் பெரிய உயரத்தில் இருப்பீர்கள். நீங்கள் கேலி செய் பவர்களின் கேலியைக் கேட்க மாட்டீர்கள்.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்