2024ஆம் ஆண்டை சர்வதேச ஒட்டகங்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. பல்வேறு சமூகங்களில் ஒட்டகங்கள் ஆற்றும் முக்கியப் பங்களிப்பை எடுத்துரைக்க இந்த ஆண்டை ஐ.நா தேர்ந்தெடுத்துள்ளது. உலகில் உள்ள ஏழு வகை ஒட்டக இனங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த ஒட்டக ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 90க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள பல குடும்பங்களின் வாழ்வாதõரத்திற்கு ஒட்டகங்கள் எந்த அளவிற்கு உதவுகின்றன என்பதை இந்த ஆண்டு மக்களுக்கு உணர்த்துகின்றது.
ஒட்டகத்திற்கு வழங்கப்படும் இச்ட்ஞுடூ என்ற சொல் அரபு மொழியில் இருந்து வந்தது. இச்சொல்லுக்கு அழகு என்று பொருள். உலகில் ஒரு கோடியே 40 இலட்சத்துக்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஒட்டகங்களில் சுமார் 80 விழுக்காடு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளன. பண்டைய காலத்தில் குதிரைப்படையைப்போல் ஒட்டகப் படையும் பல நாடுகளில் இருந்துள்ளன.
ஒட்டகம் மிகவும் பொறுமையுள்ள சாதுவான பிராணியாகும். அதன் உரிமையாளர் மட்டுமின்றி யார் அதை அழைத்தாலும் அது அதனை ஏற்றுக்கொள்ளும். ஒட்டகம் தனக்கு நோய் ஏற்பட்டால் அது பற்றி மற்ற ஒட்டகங்களுக்கு முன்னறிவிப்பு செய் யும். ஏனெனில் மற்ற ஒட்டகங்களுக்கு அந்த நோய் பரவக்கூடாது என்பதற்காக! ஒட்டகம் ஆண்டுக்கு ஒருமுறை தான் சேர்க்கை செய் யும். ஒட்டகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்துச் செல்லும். ஆடு, மாடுகளைப்போன்று முண்டியடித்துக் கொண்டு நடப்பதில்லை. இத்தகைய ஒழுங்குகளை ஒட்டகங்கள் கடைப்பிடிக்கின்றன. ஒட்டகத்தின் பாதங்களில் மிருதுவான கொழுப்பு தசைகள் நிரம்பியுள்ளன. சுடுமணல் பகுதிகளில் அது நடந்து செல்லும் போது வெப்பம் அதன் பாதங்களைத் தாக்குவதில்லை.
ஒட்டகம் ஒரு மணி நேரத்திற்கு சுமார் ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். 1300 கிலோ எடை கொண்ட சுமையுடன் இதே வேகத்தில் 50 கிலோமீட்டர் தூரத்தைக் கூட லேசாகக் கடந்து விடும். சுமார் 1100 கிலோ சுமையுடன் தினமும் 40 கிலோ மீட்டர் தூரத்தை எந்தவித தண்ணீரும் அருந்தாமல் தொடர்ந்து அதனால் பயணிக்க முடியும். அதே நேரத்தில் சுமார் 25 கிலோ மீட்டர் வேகத்தில் தினமும் 100 கிலோ மீட்டர் தூரத்தைக் கூட ஒட்டகத்தால் ஓடிக் கடக்கவும் முடியும். ஓட்டப்பந்தயம் வைத்தால் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடவும் செய் யும். பெரும்பாலான நாடுகளில் ஒட்டகங்கள் பொதி சுமக்கும் விலங்குகளாகவும், வண்டி இழுக்கவும் பயன்படுகின்றன.
பாலைவனத்தில் கிடைக்கும் முட்செடி களைக் கூட ஒட்டகம் சுவைத்து உண்ணும். அவை செரிமானம் ஆவதிலும் கூட அதற்கு எவ்விதச் சிரமமும் ஏற்படுவதில்லை. கொளுத்தும் கோடை வெயிலிலும், கொதிக்கும் பாலை மணலிலும் நீர் இல்லாமலும், உணவில்லாமலும் பல நாள்கள் வாழக் கூடிய சக்தி கொண்டவை ஒட்டகங்கள். ஒட்டகம் பொதுவாக பாலைவனங்களில் வாழும் தாவரம் உண்ணும் வகையைச் சேர்ந்த, பாலூட்டக்கூடிய, அசைபோடும் பெருவிலங்கு ஆகும். இவை 30 ஆண்டுகள் முதல் 50 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.சராசரியாக 250 கிலோ முதல் 700 கிலோ எடை கொண்டது. உயரம் 7 முதல் 8 அடி வரை இருக்கும்.
பாலைவனப் பகுதிகளில் ஒட்டகங்களை ராணுவத்தினர் அதிக அளவு பயன்படுத்துகின்றனர். ஒட்டகங்கள் மேய் வதற்குப் புல் போன்ற உணவு கிடைத்தால் 10 மாதங்கள் வரையிலும் தண்ணீர் குடிக்காமல் ஒட்டகத்தால் இருக்க முடியும். சில மாதங்கள் நீர் அருந்தாமல் உலர் நிலையில் இருந்து மீண்டும் நீர் அருந்தும் போது ஒரே மூச்சில் 100 லிட்டர் தண்ணீரைக் குடித்து விடும். இவ்வாறு நீரைக் குடித்தவுடன் 10 நிமிடங்களில் அதன் உடலில் நீர்ச்சத்து ஏறி விடும். பிற விலங்குகள் நீர் இல்லாத உலர் நிலையில் இருந்து இவ்வளவு விரைவாக நீர்ப்பதம் அடைய முடியாது. ஏனெனில்ரத்தத்தில் திடீரென்று இவ்வளவு நீர்த்த நிலை ஏற்பட்டால் அந்த விலங்குகளின் சிவப்பணுக்கள் வெடித்து விடும். ஆனால் ஒட்டகங்கள் நீர் அருந்தியவுடன் அதன் இரைப்பையில் உள்ள அறைகளில் நீரைத் தற்காலிகமாக ஏற்றிக் கொள்கிறது. அங்கிருந்து உறிஞ்சப்பட்டு ரத்தத்தின் சிவப்பு அணுக்களில் ஏற்றி சேமித்துக் கொள்கிறது. அப்போது சிவப்பணுக்களின் சவ்வுப் படலம் 240 விழுக்காடு விரிந்து இடமளிக்கிறது.
குட்டி போட்டுப் பாலூட்டும் விலங்குகள் அனைத்திற்கும் ரத்தத்தின் சிவப்பு அணுக்கள் வட்ட வடிவமாக இருக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் முட்டை வடிவத்தில் இருக்கும். ஒட்டகத்தின் உடலில் 40 விழுக்காடு நீர் குறைந்தாலும் கூட எந்தவித பாதிப்பும் இல்லாமல் வாழும் சிறப்பு அம்சம் கொண்டது. பாலைவனத்தின் சூட்டில் கண்கள் காய் ந்து விடாமல் இருப்பதற்காக அதிகமான நீரைச் சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது அதன் சுரப்பிகள். ஏற்கனவே வயிற்றில் சேமித்து வைத்திருந்த தண்ணீர் தீரும் நிலையை அடைந்து விட்டால் தனது மூக்கால் மோப்பமிட்டு நீர் நிலையைக் கண்டறிதல் அதன் சிறப்பம்சமாகும்.
பாலைவனத்தின் கடும் குளிரையும், கொடும் வெப்பத்தையும் தாங்கிக் கொள்ளும் வகையில் அதன் முடியும், தோலும் அமைந்துள்ளன. கடும் குளிருக்கும், வெயிலுக்கும் ஏற்ப ஒட்டகம் தன் உடலின் வெப்பநிலையை 34 செல்சியசில் இருந்து 41.7 செல்சியஸ் வரை (93 டிகிரி பாரன்ஹீட் முதல் 107 டிகிரி பாரன்ஹீட்வரை) தாமாக மாற்றிக் கொள்ளும். இப்படி உடல் வெப்பத்தை அதுவாகவே குளிரில் 34 செல்சியஸ் வரை குறைத்துக் கொள்வதால் கடுங்குளிர் அடித் தாலும் தாக்குப்பிடிக்கிறது. அதே நேரம் கடும் வெயில் கொளுத்தும் போதும் வெப்பத்தைக் கடத்தாத தனது தடிமனான தோலினாலும், தன் உடல் வெப்ப நிலையை 41 செல்சியஸ் வரை அதிகரித்துக் கொண்டும் கோடையின் சவாலைச் சமாளிக்கிறது.
ஒட்டகங்களின் உடல் வியர்வையை வெளியிடுவதில்லை. இதனால் உடல் நீர் வெளியாவது குறைகின்றது. நீர் இல்லாதபோது தனது சிறுநீரையும் ஒட்டகங்கள் பெருமளவு குறைக்க வல்லவை. ஆனால் அதே நேரத்தில் மனிதர்களின் உடல் வெப்ப நிலை 2 முதல் 3 செல்சியஸ் வேறுபாடுகளைத்தான் தாங்கும் சக்தி கொண்டது. ஒட்டகத்தின் முதுகுப் பகுதியில் அமைந்துள்ள திமில் போன்ற மேட்டுப் பகுதியில் கொழுப்புப் பொருட்கள் சேமித்து வைக்கப்படுகின்றன. இங்கு சேமிக்கப்படும் கொழுப்பு, வளர்சிதை மாற்றம் அடைந்து அதன் துணை வினைப்பொருளாக நீர் உற்பத்தி ஆகிறது. இதன் மூலம் ஒட்டகம் தானாகவே பசியையும், தாகத்தையும் தீர்த்துக் கொள்கிறது.
ஒட்டகத்தின் இரைப்பையில் 3 அறைகள் உள்ளன. முதல் இரு அறைகளின் சுவர்களில் தனித்தன்மை வாய் ந்த நீர் செல்கள் உள்ளன. இதில்தான் ஒட்டகம் நீரைச் சேமித்து வைக்கிறது. அதோடு ஒட்டகத்தின் தசைகளிலும் இணைப்புத் திசுக்களிலும் நீரைச் சேமித்து வைக்கும் அமைப்பு உள்ளது. பாலைவனம் என்றாலே புழுதிக் காற்றும், மணல் துகளும் வாரி இறைக்கும். அப்போது ஒட்டகத்தின் மூக்கில் அமைந்துள்ள விசேஷ மூடிகள் தானாகவே மூடிக் கொள்ளும். காதுகளின் உள்ளேயும் வெளியேயும் அமைந்திருக்கும் முடிகள், மணலோ தூசியோ காதுகளுக்குள் சென்று விடாமல் தடுத்து விடுகின்றன.
அதன் இரண்டடுக்குக் கண் இமையில் உள்ள நீண்ட சீப்பு போன்ற தடித்த நெருக்கமான முடிகள் ஒன்றனுள் ஒன்றாகக் கோர்த்துக் கொண்டு மணல் புயலில் இருந்து கண்ணுக்கு முழு பாதுகாப்பை அளிக்கிறது. பாலைவனப் புயலின்போது ஒட்டகங்கள் இமைகளை இறுக மூடிக் கொள்கின்றன. இருந்தபோதிலும் இமைகளின் தோல்கள் கண்ணாடி போன்று ஒளி ஊடுருவும்
தன்மை கொண்டது. அதனால் இமைகள் மூடினாலும் பார்வை மறைவதில்லை. ஒட்டகத்தின் பாத அமைப்பு வித்தியாசமானது. பிளவுபட்ட இரு குளம்புகளையும் சேர்த்து மிக அகண்ட வட்ட வடிவிலான தட்டையான பாதத்தைக் கொண்டது. இதனால் பாலை மணலில் கால்கள் புதைந்து நிலைதடுமாறி விடாமல் சுடும் மணலிலும் அதனால் ஓட முடிகிறது.
ஒட்டகத்திற்கு பாலைவனக் கப்பல் என்ற பெயர் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது. பாலைவனத்திலேயே வசித்தாலும் ஒட்டகம் நீரிலும் நன்றாக நீந்தும் என்பது கூடுதல் தகவல். ராஜஸ்தான் மாநிலத்தில் வீட்டிற்கு ஓர் ஒட்டகம் வளர்ப்பார்கள். தமிழ்நாட்டில் உழவு மாடுகளுக்குப் பொங்கல் இடுவது போல அங்கு ‘ஓட்டக மேளா’ கொண்டாடுகிறார்கள். அத் திருவிழா ஆண்டுதோறும் மார்ச் மாதம் நடக்கும். தேசிய ஒட்டக ஆராய் ச்சி நிலையம் ராஜஸ்தானில் தான் உள்ளது. இந்த ஆராய் ச்சி நிலையத்தில் ஒட்டகப் பால் ஐஸ்கிரீம், ஒட்டகத் தோலில் செய் த பை, குல்லா, பணப்பைகள், ஒட்டக எலும்பில் கைவினைப் பொருட்கள், ஒட்டக ரோமத்துடன் கலந்து நெய் யப்பட்ட பட்டு ஷால்கள், ஒட்டகப் பற்களில் கீசெயின் போன்றவை விற்கப்படுகின்றது. ஒட்டகச் சாணத்தில்
மின்சாரம் தயாரிக்கும் முயற்சியும் நடக்கிறது.
நபி(ஸல்) அவர்கள் வாழ்வில் ஒட்டகம்
அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு ஒட்டகம் மிகவும் துணையாக இருந்தது. ஓரிறைக் கொள்கையை மக்காவில் எடுத்துவைத்தபோது அங்குள்ள மக்கள் பெரும் துன்பங்களைத் தந்தனர். இறைக்கட்டளைப்படி நபி(ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனாவிற்குச் சென்ற போது ஒட்டகம் பெருமளவு பயன்பட்டது.மதீனாவிற்கு நபி(ஸல்) அவர்கள் சென்றதும் அங்குள்ள அன்ஸாரிகள் ஒவ்வருவரும் நபிகள் தங்கள் இல்லத்திலேயே தங்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர். நபிகளோ, தனது ஒட்டகம் எங்கே நின்று தன் கால்களை மடக்கி இளைப்பாறுகிறதோ அங்கே தங்குவதாகக் கூறினார்கள். நபி(ஸல்) அவர்களின் ஒட்டகம் ஒரு பெரிய திறந்த வெளியில் சென்று நின்றது. விளைபொருட்களை உலர வைக்கும் இடம் அது.
அந்த இடத்தின் அருகில் வசித்துவந்த அபூ அய் யூப் என்பவரின் தாய் , நபிகளின் உடைமைகளை எடுத்து அவரையும் வரவேற்றுத் தன் வீட்டுக்குக் கொண்டு சென்றார். நபியோ, தனது உடைமைகள் எங்கே போகிறதோ அதுதான் தனது இருப்பிடம் என்று கூறி அந்த இடத்திற்குச் சென்றார்கள்.நபிகளாரின் ஒட்டகத்தின் பெயர் கஸ்வா. நபி(ஸல்)அவர்கள் அதனை அபூபக்கர்(ரலி) அவர்களிடமிருந்து அந்த ஒட்டகம் நான்கு வயதாக இருக்கும் போது விலைக்கு வாங்கினார்கள். நபிகளாரிடம் அந்த ஒட்டகம் 11 ஆண்டுகள் வாழ்ந்தது.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் ஓர் ஒட்டகம் இருந்தது. ‘அள்பா’ என்று அதற்குப் பெயரிட்டிருந்தார்கள். இந்நிலையில் ஒரு கிராமவாசி ஓர் ஒட்டகத்துடன் வந்தார். (அவரது ஒட்டகத்துக்கும், நபிகள் நாயகத்தின் ஒட்டகத்துக்கும் வைக்கப்பட்ட போட்டியில்) அக் கிராமவாசியின் ஒட்டகம் முந்திச் சென்றது. இது முஸ்லிம்களுக்கு மனக் கவலையை ஏற்படுத்தியது. இதனை அறிந்து கொண்ட நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ‘இவ்வுலகில் எப்பொருள் உயர்நிலையை அடைந்தாலும் அதைத் தாழ்த்துவது அல்லாஹ்வின் நடவடிக் கையாகும்’ என்று கூறினார்கள்.
ஒட்டகம் அல்லாஹ் படைத்திருக்கும் ஓர் அற்புதமான படைப்பு. ஒட்டகம் படைக்கப்பட்டதைக் குறித்து இறைவன் சிந்திக்கு
மாறு கட்டளையிடுகின்றான். ‘ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? ‘(திருக்குர்ஆன் 88:17)
சிந்திப்பவர்களுக்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. ஒவ்வொரு படைப்பும் இறைவனின் வல்லமைக்குச் சான்று பகர்கின்றன. ஒட்டகம் குறித்தும் சிந்திப்போம். இறை வல்லமையை அறிவோம்.