மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாத்தின் தனித்தன்மைகள்
Dr.J.முஹையுதீன், 1-15 ஜனவரி 2025


இறைவன் மனிதனைப் படைத்து அவனை அப்படியே விட்டு விடவில்லை. மனிதன் வாழ்வதற்கான அனைத்து வழிகாட்டுதல்களையும், இறைவேதம், இறைத்தூதர்கள் மூலம் அருளியுள்ளான். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு மனிதனும் இந்த வழிகாட்டுதலைப் பின்பற்றித்தான் வாழ வேண்டும். இறைக்கட்டளைக்கு முற்றிலுமாகக் கட்டுப்பட்டு நடப்பவனுக்குப் பெயர் தான் முஸ்லிம். முஸ்லிம்கள் இஸ்லாத்தை வெறுமனே மதமாக மட்டும் பார்ப்பதில்லை. ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற வாழ்வியல் போதனைகளைப் போதிப்பதால் இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறியாக, மார்க்கமாகத் திகழ்கிறது.

ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் வழிகாட்டக் கூடிய மார்க்கம் இஸ்லாம் மட்டும் தான் என்பதை இஸ்லாம் எளிய மார்க்கம், இயற்கை மார்க்கம், சமூக மார்க்கம், பகுத்தறிவு மார்க்கம், ஒற்றுமை மார்க்கம், சுதந்திர மார்க்கம், அரசியல் மார்க்கம், நடுநிலை மார்க்கம், அமைதி மார்க்கம் ஆகிய ஒன்பது தலைப்புகளில் இஸ்லாத்தின் தனித்தன்மைகள் என்ற தலைப்பில் எளிமையான மொழி நடையில் அனைத்து மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இந்நூலில் நூலாசிரியர் Dr.J.முஹையுதீன் விளக்கியுள்ளார்.

இந்நூலை இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT) மிகச் சிறப்பான வடிவமைப்பில் வெளியிட்டுள்ளது. இந்நூலின் முத்தாய்ப்பாக நிறைவாக என்ற பகுதியில் இஸ்லாம் எவ்வாறு தனித்துவமாக விளங்குகிறது என்பதை பதினோரு குறிப்புகளுடன் விளக்குகிறார் ஆசிரியர். ‘ஒவ்வொரு குழந்தையும் இயற்கை மார்க்கத்திலேயே பிறக்கின்றது’ என நபி(ஸல்) கூறினார்கள். இயற்கை மார்க்கம் இஸ்லாம் என்பதை விளக்குவதே இந்நூலின் நோக்கம். இந்நூலின் நோக்கத்தைப் புரிந்து அனைவரிடமும் அறிமுகம் செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரின் பொறுப்பாகும். படிப்போம்! பரப்புவோம்!

நூல்: இஸ்லாத்தின் தனித்தன்மைகள்
ஆசிரியர்: Dr.J.முஹையுதீன்
வெளியீடு: இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (IFT),
138,IFT சந்து, பெரம்பூர்
நெடுஞ்சாலை,
சென்னை 600012.

தொலைப்பேசி: 04426620041
பக்கங்கள்: 124
விலை: ரூ. 130/


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்