ஒன்றிய அரசின் பட்ஜெட் 2025-26
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் 16 பரிந்துரைகள்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்தின் அகில இந்தியத் தலைவர் சையத் சஆததுல்லா ஹுசைனி புதுதில்லி தலைமையகத்தில் நடைபெற்ற மாதாந்திர பத்திரிகையாளர் சந்திப்பில் வரவிருக்கும் ஒன்றிய பட்ஜெட்டுக்கான விரிவான ஆலோசனைகளை வழங்கினார்.
இளைஞர்களின் வேலையின்மை 45.4 விழுக்காடாகவும், ஏழ்மையில் வாழ்பவர்கள் கிட்டத்தட்ட 20 விழுக்காடாகவும் உள்ள சூழலில், விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2.8% ஆகக் குறைந்துள்ள நிலையில் (CME தரவு) 2025-26 ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
சமத்துவமின்மை, வேலையின்மை, ஓரங்கட்டப்பட்ட நிலை ஆகியவற்றுக்குத் தீர்வு காண்பதற்காக, நீதி அடிப்படையில் மறுபகிர்வு, சமமான வளர்ச்சி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து வரவு செலவுத்திட்டத்தில் முக்கியமான கொள்கை மாற்றங்களைச் செய்ய ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அறிவுறுத்துகிறது.
வணிக வளர்ச்சியையும், வரிச் சலுகைகளையும் மையமாகக் கொண்ட வழங்கல் முறை செயல் திட்டத்திலிருந்து, குடிமக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பது, நுகர்வை ஊக்குவிப்பது, நலத்திட்டங்களை மேம்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட தேவைசார் அணுகுமுறைகளின் பக்கம் மாறவேண்டும். பொருளாதார நீதிக்கான தேவை, தற்போதைய நெருக்கடியின் மூல காரணங்களை நிவர்த்தி செய்வதன் மூலம் அரசு நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பது ஆகியவை முக்கியமான பரிந்துரைகளாககின்றன.
வலியுறுத்தப்பட்டு இருக்செலவினங்களுக்கான 10 பரிந்துரைகளும், வருவாய்க்கான 6 பரிந்துரைகளையும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் முன்வைக்கிறது.
செலவினங்களுக்கான பரிந்துரைகள்
1) வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்திலும், கிராமப்புற பொரு ளாதாரத்தை மாற்றி அமைக்கும் நோக்கத்திலும் எடுக்கப்பட்ட ஒரு நல்ல நடவடிக்கையாக ஐயத்திற்கு இடமில்லாத வகையில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) இருக்கிறது. 2024ஆம் ஆண்டில் அதற்கான பட்ஜெட் 33 விழுக்காடு குறைக்கப்பட்டதால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்கு ஒரு காரணமாகி விட்டது. இந்த 33 விழுக்காட்டுக் குறைப்பைத் திரும்பப்பெற்று, 2025ஆம் ஆண்டின் பட்ஜெட்டில், நகர்ப்புறங்களில் உள்ள வேலையின்மையைச் சமாளிக்க நகர மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (MGNREGA) நடைமுறைப்படுத்த வேண்டும்.
2) கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டிய கட்டாயத் தேவை நமக்கு இருக்கிறது. புதுப்பிக்கத்தகு ஆற்றல் திட்டங்கள், நீர் சேமிப்பு, வேளாண் செயலாக்கம், தொழில்நுட்ப ஆதரவு விவசாயம், இயற்கை விவசாயம் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தும் வகையில் சிறப்பு கிராமப்புற வேலைவாய்ப்பு மையங்களை நிறுவ வேண்டும். கிராமங்களிலிருந்து நகர்ப்புறம் நோக்கி மக்கள் புலம் பெயர்வதைத் தடுக்க, கிராமப்புறங்களை அதிகம் கவரக்கூடியதாக ஆக்கி, விரும்பி வாழும்படி செய்து, கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, நகர்ப்புற அளவிலான உயர்தர கிராமப்புற நகரங்களை உருவாக்குவதை பட்ஜெட்டில் முன்மொழிய வேண்டும்.
3) இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்திற்கு 30 விழுக்காட்டு பங்களிப்பையும், 110 மில்லியன் மக்களுக்கும் மேலாக வேலைவாய்ப்பையும் இந்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறைகள் தான் அளித்து வருகின்றன. இருந்த போதிலும் கொள்கை அளவில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் சிறிய வர்த்தகங்களுடைய தேவைகளைப் புறந்தள்ளி விட்டு, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது தான் கவனம் செலுத்தப்படுகிறது. மானியக்கடன், தொழில்நுட்ப மேம்பாடு, உள்கட்டமைப்புக்கான ஆதரவு, ஒதுக்கீடு செய்யப்பட்ட பொது கொள்முதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான வரிச் சலுகைகள்,
நிலையான உற்பத்தி நடைமுறைகளுக்கான நிதி உதவி ஆகியவற்றை உள்ளடக்கிய இந்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறைகளை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு பட்ஜெட் கொள்கைகள் கொண்டு வரப்பட வேண்டும்.
4) தற்போதைய திட்டங்களான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (PLI) மூலதனம் சார்ந்த தழில்துறைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, தொழிலாளர் சார்ந்த துறைகளைப் புறக்கணிக்கின்றன. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை(PLI) திட்டங்களின் ஒரு பகுதியாக வேலைவாய்ப்புகள் உருவாக்கத்தைக் கட்டாயப்படுத்துவதை நாங்கள் முன்மொழிகின்றோம். குறிப்பாக இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மானியம் வழங்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, முஸ்லிம்கள், நாட்டின் பின் தங்கிய சமூகத்தின் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வேøல வாய்ப்புகளை வழங்குவதற்கும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை(PLI) திட்டம் இணைக்கப்பட வேண்டும்.
5) மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கும் விதமாகத் தொடங்கப்பட்ட திட்டம் தான் ஆயுஷ்மான் பாரத் திட்டம். நீண்ட காலக் கோரிக்கையான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் (GDP) 4 விழுக்காடு சுகாதாரத்திற்காக ஒதுக்கப்பட வேண்டும் என்பதை 2025 பட்ஜெட்டில் நிறைவேற்ற வேண்டும். நடுத்தர மக்களுக்காகவும், விரிவான அளவில் வெளிப்புற நோயாளிகளின் நலன், நோய் கண்டுபிடிப்பு முறைகள்,
மருந்துகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பொது மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்திற்கு மாறும் வகையில், ஆயுஷ்மõன் பாரத் திட்டத்தை அடுத்த படிநிலைக்கு எடுத்துச் செல்ல இந்த முன்னெடுப்பு எளிதாக வசதி செய்யும். வலுவான மோசடி எதிர்ப்பு முறைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தகவல்களைத் தொடர்ந்து பதிவு செய்ய வகை செய்யும் தொடரேடுகளை (BLOCK CHAIN) பயன்படுத்திக் கொள்ள முடியும். அதே நேரத்தில் மாநிலத் திட்டங்களோடு ஒருங்கிணைப்பு செய்தால் திறன்மிக்கதாகவும், வெளிப்படையானதாகவும் அமைவதை அது உறுதிப்படுத்தும்.
6) இதே போல், விரிவான மிஷன் ஷிக்ஸா பாரத்(Mission Shiksha Bharat) திட்டத்தை வழிமொழிகின்றோம். தேசிய அளவில் தரத்தை அதிகரிக்கக் கூடிய, சமச்சீரான அணுகுமுறையை உறுதிப்படுத்தும் விதமாக, பள்ளிக்கூடங்கள், மேல்நிலை, நடுநிலை, உயர்நிலைக் கல்வியை உள்ளடக்கியதாக அது இருக்க வேண்டும். நாட்டின் ஒட்டுமொத்த உள்நõட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் 6 விழுக்காடு கல்விக் கான பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட வேண்டும். கல்வி உரிமைச் சட்டம் கீழ்க்கண்டவாறு திருத்தம் செய்யப்பட வேண்டும்.
(அ) ஒட்டுமொத்த மேல்நிலைக் கல்வியை உள்ளடக்கியதாக
(ஆ) கிராமப்புறங்களில், வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள பகுதிகளில் நல்ல பயிற்சி பெற்ற, நல்ல ஊதியம் பெறும் ஆசிரியர்கள் கொண்ட குழு அடங்கியதாக
(இ) ஆய்வுப் படிப்பிற்கான, உயர் கல்விக்கான கல்வி உதவித்தொகை, மாநில பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான நிதி வழங்கலை அதிகரிப்பதாக தேசிய கற்றல் மதிப்பீட்டுத் திட்டங்கள்(National Learning Assessment Program) கல்விசார் பலாபலன்களைக் கூர்ந்து கண்காணிக்கவும், மேம்படுத்தவும் வலியுறுத்துகின்றோம்.
7) ஒட்டு மொத்த பின்தங்கிய நிலையில் மூழ்கிக் கிடக்கும் பெரும் அளவிலான சிறுபான்மை மக்களோடு இந்தியா இன்னும் வளர்ச்சி அடைந்து விட முடியாது. ஆகையால், பிற்படுத்தப்பட்ட சிறுபான்மைச் சமூகங்களை, குறிப்பாக முஸ்லிம்களை மேம்படுத்த உடனடி நடவடிக்கைகளை அவசரமாக எடுக்க வேண்டும். பெரும் எண்ணிக்கையில் பாதியில் படிப்பை நிறுத்தும் இடைநிற்றல் விகிதத்தைச் சரி செய்யும் விதமாக, முஸ்லிம் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைத் திட்டத்தைப் புதுப்பிக்க வேண்டும். உயர்கல்விக்கும், தொழில் முனைவோர் தொழில் நிறுவனங்களைத் தொடங்கவும் வட்டியில்லா கடன்களை முஸ்லிம் தொழில்முனைவோர், மாணவர்கள் கடன் நிதியம்(Muslim Enterpreneur and Student Load Fund) மூலம் வழங்குவது, அவர்கள் கல்வியில் உயர்ந்த நிலையை அடைவதையும், தன்னிறைவான பொருளாதாரத்தைப் பெறுவதையும் ஊக்குவிக்கும் விதமாக அமையும்.
MCDகளில் திறன்களை வளர்த்துக் கொள்ள பயிற்சி அளிக்கும் அர்ப்பணிக்கப்பட்ட மண்டலங்களை நிறுவுவதை முன்மொழிகிறோம். வளர்ந்து வரும் களங்களான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வேளாண் தொழில்நுட்பம், டிஜிட்டல் திறன்களை வளர்த்தல் துறைகளில் அவை நேரடி செய்முறைப் பயிற்சிகளை அளிக்க வேண்டும்.
8) எஸ்.சி, எஸ்.டி வளர்ச்சித் திட்டங்கள் பெயரளவில் இருப்பதைத் தாண்டி உயிர்ப்புடன் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி சமூகத்தினர்கள் நிலங்களின் சொந்தக்காரர்களாகவும், வளங்களைப் பெறும் உரிமையோடு அதிகாரங்களைப் பெற்றிருப்பவர்களாகவும் இருக்க வேண்டும். நில வளங்களை வட்டியில்லா கடன்கள் மூலம் பெற்று, எஸ்.சி, எஸ்.டி சமூகத்தினர் விவசாயம் செய்யவும், சிறு தொழில் தொடங்கவும் ‘நில அதிகாரத் திட்டம்’ கொண்டுவர வேண்டும். எஸ்.சி, எஸ்.டி சமூகத்தினர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிடம் இருந்து பொது கொள்முதல் செய்வதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். வேலை வாப்புகளை உருவாக்கி வரி மானியம் வழங்க வேண்டும். அடிப்படை சேவைகளைப் பெறவும், உள்ளூர் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், சமூக வளர்ச்சிக்கான கட்டமைப்பை உருவாக்கி உதவி புரியவும் வேண்டும். இவை அனைத்தும் முக்கிய நடவடிக்கைகளாக முன்வைக்கப்படுகிறது.
9) இந்தியாவின் விவசாய நெருக்கடிகளைத் தீர்க்கும் விதமாக சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். உடனடி கடன் விடுவிப்பு(தள்ளுபடி) திட்டங்கள் மூலமாகவும், விவசாயத்திற்கான கடன்களை வட்டியில்லாமல் பெறப்படுவதை எளிமையாக்குவதும், முக்கிய பயிர்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச விலை சட்டப்பூர்வமாக்கப்படுவதும், நிதி இடர் ஏற்படுவதிலிருந்து விவசாயிகளைப் பாதுகாப்பதற்காகவும் பயிர்களுக்கான இன்சூரன்ஸ் விரிவுபடுத்தப்பட வேண்டும். நீர்ப்பாசனம், வேளாண் பதப்படுத்தல் மையங்கள், நிலையான விவசாய நடைமுறைகள் ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலம் உற்பத்தித்திறன், பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நிலைத்தன்மைகளை மேம்படுத்த முடியும். நிலப் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலமும், விவசாயம் சார்ந்த ஆராய்ச்சிகளை வலு வாக்குவதன் மூலமும், அமைப்பு ரீதியான சவால்களுக்குத் தீர்வு காணவும், அதே நேரத்தில் புதுமைகளை ஊக்குவிக்கவும் முடியும்.
10) தைரியமான நடவடிக்கையாக பொதுவான அடிப்படை வருவாய்த் திட்டத்தை(UBI) நடைமுறைப்படுத்த இந்தியாவிற்குச் சரியான நேரம் தற்பொழுது வந்திருக்கிறது என்பதை மேற் கண்ட முன்மொழிதல்களோடு, பரிந்துரைக்கின்றோம். நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்கும் குறைந்த பட்ச வருமானத்தை உத்தரவாதம் தரும் வகையில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதை அது நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். சட்டப்பிரிவுகள் 38, 39இன் படி, மாநிலங்களின் உரிமைகளை நிறைவேற்றும்படி இருக்க வேண்டும். இதை எப்படி அடைய வேண்டும் என்றால், பாதிக்கப்படக்கூடிய குழுக்களில் இருந்து ஆரம்பித்து, படிப்படியான அணுகுமுறைகள் மூலம், பகுதி பகுதியாக அமலாக்கம் செய்யப்பட வேண்டும். பலன் தராத, திறனற்ற நலத்திட்டங்களுக்கான நிதியை மடைமாற்றம் செய்து, பொதுவான அடிப்படை வருவாய்த் திட்டத்தின் (UBI) மூலம் கீழ்க்கண்டவற்றை உறுதிப்படுத்த வேண்டும்.
(i) பொருளாதார பாதுகாப்பு (ii) வறுமையைக் குறைத்தல் (iii) சமூக நல அமைப்புகள் முழுமையாக நிரப்பப்படுதல் நிதித் திறன் வளர்வதை உறுதி செய்யும் முகமாக விரிவாக்கம் செய்யப்படுவதைத் திட்டங்கள் மூலமும், அவை நியாயமாக விநியோகிக்கப்படுவதையும் தேசிய ஆணைக் குழு மேற்பார்வையிட வேண்டும்.
வருவாய்க்கான பரிந்துரைகள்
1) மறைமுக வரிகள் மீதான அதிகரித்து வரும் நம்பிக்கை, பொருளாதார சமத்துவமின்மையை அதிக மாக்கிக் கொண்டே வருகிறது. ஜி.எஸ்.டி வரி விகிதங்களில், தனிப்பட்ட ஒரு வகையாக ஈ.ஜி.எஸ்.டி(EGST (அத்தியா வசியப் பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி) கொண்டு வரப்பட வேண்டும் என்று முன்மொழிகின்றோம். இந்த வகை பொருட்களுக்கு, சட்ட ரீதியாக வரிவிகித உச்சவரம்பு 5 விழுக்காடு இருக்கும் வகையில் 2025 பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட வேண்டும். வருவாய் இழப்பைச் சமாளிக்க, ஆடம்பரப் பொருட்கள், அத்தியாவசியமற்ற பொருட்கள் மீதான (Luxury and Non-Essential Goods Tax ) LNGT என்ற முற்போக்கான வரியை ஆடம்பரப் பொருட்கள், அத்தியாவசிய மற்ற பொருட்கள் மீது சுமத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இது பொதுமக்களுக்கு சுமையாக இல்லாமல், கணிசமான வருவாயை ஈட்டித் தரும்.
2) இந்தியா போன்ற ஏழை நாட்டில், அதிக நிகர சொத்து மதிப்புடைய தனிநபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து இருக்கின்றனர். 1000 கோடிக்கும் அதிகமாக நிகர சொத்துகள் இருந்தால், விண்ட்ஃபால் வரி (காற்றாலை வரி எதிர்பாராத வருமான வரி) விதிப்பதற்கான சரியான நேரம் இது. 2019இல் நீக்கப்பட்ட குறைந்தபட்ச கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான 30% வரியை, மீண்டும் கொண்டு வந்து வசூலிக்க வேண்டும்.
3) ஒன்றிய நிதி ஆணையத்தின் பரிந் துரைகளின்படி, மாநிலங்களுக்கான ஒன்றிய அரசின் வரிகளை அதிகப் படுத்தி இருப்பது குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. அளவுக்கதிகமான ஒன்றிய மயமாக்கல் மாநிலங்களின் உரிமையைப் பறித்து இருக்கிறது. மாநிலங்கள் தங்களுடைய தேவைக்குத் தகுந்தாற்போல வளர்ச்சி, நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றன. ஒன்றிய அரசின் வரிகளில் மாநிலங்களின் பங்கை 41 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும்.
4) இந்தியாவில் இயங்கி வரும் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் மிகப் பெரியதாக இருக்கும் நுகர்வோர் கட்டமைப்பிலிருந்து மிகப்பெரிய லாபத்தைச் சம்பாதித்து வருகின்றன. ஆனால், உள்நாட்டு பொருளாதாரத்திற்கு அவற்றின் பங்களிப்பு போதுமானதாக இல்லை. இந்தியாவின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதை உறுதி செய்யும் வகையில், மின்னணு வர்த்தகத் தளம், சமூக ஊடக நிறுவனங்கள் மீதான டிஜிட்டல் வரி விதிக்கப்படுவதை முன்வைக்கின்றோம். அந்த நிறுவனங்கள் இந்தியாவின் தரவு, நுகர்வோர் தகவல்களில் இருந்து பெரும் இலாபம் அடைகின்றன.
5) இந்தியாவில் இருக்கும் செல்வந்தர்கள் நாட்டின் வளர்ச்சிக்குத் தங்களுடைய முதலீடுகளை வழங்குவதின் மூலம் பெரும் பங்காற்ற முடியும். இஸ்லாமிய சுகுக்(ஷரீஆ விதிமுறையுடன் கூடிய) பத்திரங்கள் போல, உள்கட்டமைப்பு பத்திரங்களை இந்தியக் குடிமக்களிடம் குறிப்பாக செல்வந்தர்களிடம் அறிமுகப்படுத்தி, முக்கியமான உள்கட்டமைப்பு, கல்வி, மருத்துவத் திட்டங்களுக்காக நிதியைப் பெறலாம். இந்தப் பத்திரங்களுக்கு வரிவிலக்கு அல்லது இந்தத் திட்டத்தில் பங்குபெறும் பயனாளர்களுக்கு இலாபகரமான வருமானத்தைத் தரலாம்.
6) கார்ப்பரேட் நிர்வாகம், கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) நடைமுறைகளைக் கடுமையாக்குவதன் மூலம் கம்பெனிகள் அடிப்படைக் கட்டுப்பாடு களைத் தாண்டிய அர்த்தமுள்ள பங்களிப்பை பொதுச் சொத்துகளுக்கு அளிக்க முடியும். கார்ப்பரேட் நிர்வாகம், கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு(CSR) நிர்வாகங்களை வலுப் படுத்துவதன் மூலம் கல்வி, மருத்துவம், கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்குத் தேவைப்படும் நிதிகளை அதிகப்படுத்த முடியும். இகுகீ அறிக்கையிடல் செயல்முøறகளை எளிதாக்கும் நடவடிக்கைகளை பட்ஜெட் முன்மொழிய வேண்டும். பாதிக்கும் அளவீடுகளைக் கம்பெனிகளுக்கு அறிமுகப்படுத்தி, அவர்கள் செய்யும் முதலீடுகளால் பெறப்படும் கணிசமான பயன்களை வெளிப்படுத்தி நிரூபிக்க வேண்டும்.
தமிழில்: ஜ.ஜாஹிர் உசேன்