மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

இலக்கியச் சுடர் விருது
சமரசம் குழு, June 16-30, 2025



உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாட்டில் ஜரினா ஜமால், பாலமுனை ஃபாரூக், கவிஞர் பாரதன், மௌலவி பி.எம்.கலீலுர் ரஹ்மான் மன்பயீ, அபூ ஹாஷிமா, மு.முஹம்மது சலாஹுதீன், ரஹ்மத் ராஜகுமாரன், ஆர்னிகா நாசர், முனைவர் அ.உசேன், அஹமது கபீர், அப்சல், சிராஜுத்தீன், எஸ்.ஏ.அப்துல் அஜீஸ், இளையான்குடி ஹிதாயத்துல்லாஹ், ஆலிம் புலவர் ஹுஸைன் முஹம்மது, அபுல் அமீன், சேயன் இப்ராஹீம், முனைவர் சையது ஜாஹிர் ஹஸன், வி.எஸ்.முஹம்மது பஸ்லுல்லாஹ், கவிஞர் ஜலாலுதீன், அமீர் அல்தாப், துறைமாலிறையன், மௌலவி அப்துர் ரஹ்மான் ஜமாலி, கோம்பை அன்வர், காயல் மகபூப், மு.முஹம்மது யூசுப், முனைவர் அ.ஜாஹிர் ஹுஸைன் பாகவி ஆகிய 27 எழுத்தாளுமைகளுக்கு ரூபாய் இருபதாயிரமும் பொற்கிழியுடன் இலக்கியச் சுடர் விருதும் வழங்கப்பட்டது.

கட்டுரையாளர் சேயன் இப்ராஹீம் சமரசம் இதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருபவர். ஜரினா ஜமாலின் அக்க ரைப் பச்சை நாவல் தொடர் சமரசத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது. சமரசத் தில் பல கட்டுரைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் ஊழியரான ஜரினா ஜமால் எழுத்துத் துறை மட்டுமின்றி அரசியல், சமூகத் தளத்திலும் இயங்கி வருபவர். உதய தாரகை இருமாத இதழின் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.

இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். சமரசத்தில் 20 கதைகள் எழுதியிருக்கின்றார். ‘மூன்றாவது தோள்’ நாவல், சுவனத்தைச் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள், விடியலைத் தேடிய வெள்ளைப் புறா சிறுகதைத் தொகுப்பு உள்ளிட்ட 7 நூல்களை எழுதியுள்ளார். வெல்ஃபேர் கட்சியின் மகளிர் அணித் தலைவி, மாநில துணைத் தலைவர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். எழுத்து, பேச்சு என முத்திரை பதித்துள்ள இவர் அழைப்புப் பணி, சீர் திருத்தப் பணி ஆகியவற்றிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார். இலக்கியச் சுடர் விருது பெரும் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்