ஒரு காலத்தில் சமுதாய மக்களுக்கு மத்தியில் இப்போது இருப்பதை விடக் கடுமையான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் அதற்குரிய வாழ்வியல் முறைகளும் இருந்தன. இதனால் இவ்விரு பிரிவினருக்கும் இடையில் கடுமையான வேறுபாடுகளும், இடைவெளிகளும், அந்நியத் தன்மை யும், உயர்வு தாழ்வு கற்பித்தலும் கூட இருந்து வந்தன. அவற்றின் அடை யாளங்களாக ஒரு பக்கம் பெரும் பெரும் மாளிகைகள். மறுபக்கம் சின்னஞ்சிறு ஓலைக் குடிசைகள்.
இன்றைக்கு வீடுகள் அடுத்தடுத்து (VILLAS & APARTMENTS) என ஒரே மாதிரி தொகுப்பு வீடுகளாகக் கட்டப்பட்டாலும் அங்கு குடியிருப்பவர்களுக்கிடையில் தான் எவ்வளவு இடைவெளி! ஒரு காலத்தில் பல குடும்பங்களின் சங்கமமாக இருந்த குடியிருப்புப் பகுதிகள் (COLONY)என்கிற கருத்தோட்டமும் முறைகளும் காலவோட்டத்தின் மாற்றத்துக்கு முன்னால் ஈடு கொடுக்க முடியாமல் அடுக்குக் குடியிருப்பு (APARTMENT CULTURE) முறையாக மாறிவிட்டதன் விளைவுகளை நாம் அன்றாடம் அனுபவித்து வருகின்றோம்.
வீடுகள் அடுத்தடுத்து இருக்கின்றன. ஆனால் உள்ளங்களுக்கிடையில் பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ளன. அருகில் இருக்கும் அண்டை வீட்டாரின் பெயரைக்கூட அறிந்து வைத்திராத ஓர் அந்நியமான வாழ்வியல் முறை தோன்றி அதுவே, நவீனம் நாகரிகம் என்று மனிதர்களை ஏமாற்றிக் கொண்டுள்ளது. மனிதர்களுக்கிடையில் இடைவெளியும் அந்நியத்தன்மையும் இருந்தால் அவர்களை மனித சமுதாயம் என்று எப்படி அழைக்க முடியும்?
ஒரு பகுதியில் வசிப்பவர்கள் மத, இன, மொழி, அறிவு, பொருளாதாரம் போன்ற வெளிப்படையான வேறுபாடுகள் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் ‘ஒரு பகுதியில் வசிப்பவர்கள்’ என்கிற ஒற்றைப் புள்ளியில் ஒன்றிணையும் போதுதான் அவர்கள் இணைந்து வாழ்வதற்கான பயன்களை அனுபவிக்க முடியும்.
உதாரணமாக, ஒரு வீட்டில் தீப்பிடித்தால் மற்ற வீட்டினர் ‘அந்த வீட்டில்தானே தீப்பிடித்துள்ளது. அதனால் நமக்கென்ன’ என்றிருந்தால் அந்தத் தீ அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவி தனது வீடு வரை வருவதற்கு அடுத்த வீட் டார் குறித்த அந்த அலட்சியமே காரணமாக இருக்குமல்லவா? அதேபோல, நடு இரவில் தனது வீட்டில் இருக்கின்ற தனது குடும்ப உறுப்பினரில் ஒருவருக்குத் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு அவசர நிலை வந்தால் உதவிக்கு, உறவினருக்கு முன் அண்டை வீட்டார்தான் வந்தாக வேண்டுமல்லவா?
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனா சென்றவுடன் ஒரு தூய்மையான சமுதாயத்தைக் கட்டமைத்தார்கள். அந்தக் கட்டமைப்புக்குரிய வழிமுறைகள் குறித்து நாம் சிந்திப்பதுடன், அவற்றை நடை முறைப்படுத்த முன்வர வேண்டும். முதலில் சமுதாயக் கட்டமைப்பு என்கிற இந்த மாபெரும் பணிக்குரிய குர்ஆனிய வழிகாட்டுதல் இஸ்லாத்தின் ஏகத்துவத்துடனும் இறைவனுக்கு இணைவைக்கா திருத்தல் என்கிற அடிப்படைக் கொள்கைகளுடன் இணைத்தே சொல்லப்பட்டுள்ளமை நமது கவனத்துக்குரியதாகும்.
இமாம் பஸ்ஸார் அவர்கள் அறிவித்துள்ள ஒரு நபி மொழியில் இவ்வாறு காணலாம்: ‘அண்டை வீட்டார் மூன்று வகையினராவர். ஒரேயொரு உரிமை மட்டும் கொண்ட அண்டை வீட்டார். அண்டை வீட்டார்களில் இவரே மிகவும் குறைந்த உரிமை கொண்டவராவார். இரண்டாவது அண்டை வீட்டார், இரண்டு உரிமை கொண்ட அயல்வாசியாவார். மூன்றாவது அண்டை வீட்டார் மூன்று உரிமைகள் கொண்டவராவார்.
ஒரேயொரு உரிமை மட்டும் உடைய அண்டை வீட்டார், உறவினர் அல்லாத இணை வைக்கின்ற அண்டை வீட்டார் ஆவார். இவ ருக்கு அண்டை வீட்டார் எனும் ஒரேயொரு உரிமை மட்டும் உள்ளது. இரண்டு உரிமைகள் கொண்ட அண்டை வீட்டார், முஸ்லிமான அண்டை வீட்டார் ஆவார். இவருக்கு முஸ்லிம் எனும் வகையில் ஓர் உரிமையும் அண்டை வீட்டார் எனும் இன்னொரு உரிமையும் உள்ளது. மூன்று உரிமைகள் கொண்ட அண்டை வீட்டார், உறவினராகவும் முஸ்லிமாகவும் இருக்கின்றவராவார். இவருக்கு முஸ்லிம் எனும் வகையிலும் உறவினர் எனும் வகையிலும் அண்டை வீட்டார் எனும் வகையிலும் மூன்று உரிமைகள் உள்ளன’
அண்டை வீட்டாருடன் நல்லுறவும் நன்னடத்தையும்
அண்டை வீட்டாருக்குத் தொல்லை தருகின்ற எதையும் செய்யாதிருத்தல், அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தருதல், அவர்களது இன்ப துன்பங்களில் பங்கு வகித்தல் போன்றவை நல்ல அண்டை வீட்டார் உறவுக்குரிய அம்சங்கள் ஆகும்.
ஒருவரது அண்டை வீட்டாரின் எல்லை என்பதை அந்தந்த நாட்டின் பொதுவான வழக்கத்துக்குத் தகுந்தாற்போல நிர்ணயித்துக் கொள்ளலாம் என்பதுதான் ஃபுகஹாக்கள் எனும் மார்க்கச் சட்டக்கலை அறிஞர்களின் பொதுவான கருத்தாகும். ஆனாலும், ஒருவரது வீட்டுக்கு நான்கு புறங்களில் ஒவ்வொரு புறத்திலும் வாழுகின்ற நாற்பது வீடுகள்தான் அவரது அண்டை வீட்டார்கள் ஆவர் என்று இமாம் ஹஸனுல் பஸரி(ரஹ்) அவர்கள் நிர்ணயம் செய்துள்ளார்.
நபி(ஸல்) அவர்கள் மனித சமுதாயக் கட்டமைப்புக்கு ஏராளமான திட்டங்களையும், அவற்றுக்கான அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் திருக்குர்ஆனின் வசனங்களின் பின்னணியில் வழங்கியுள்ளார்கள். அவற்றில் ஒன்றுதான் அண்டை வீட்டாருடன் நல்லுறவு பேணல்!
இப்போது இது குறித்த நபி(ஸல்) அவர்களது அறிவுரைகளில் நாம் அதிகமாகக் கேட்டுள்ள ஒன்றினை மட்டும் நாம் நமது சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம். அண்ணலார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அண்டை வீட்டார் பசியுடன் இருக்க தான் மட்டும் வயிறு நிறைய உண்பவன் உண்மையான இறைநம்பிக்கையாளன் அல்ல!’
இந்த நபிமொழியை நாம் இதன் வார்த்தைப் பொருளுடன் முடித்துக் கொள்கிறோம். உண் மையில் இந்த நபிமொழி அதன் வார்த்தைப் பொருளையும் தாண்டி நம்மிடம் வேறு பொறுப்பினை உள்ளடக்கியுள்ளது. ஒருவரது அண்டை வீட்டார் பசியோடு இருக்கிறார் என்பதை எப்படித் தெரிந்து கொள்ள முடியும்? இரண்டு வழிகளில் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்! ஒன்று, அவராகவே வாய்விட்டுச் சொல்ல வேண்டும். அவர் சொல்லாமல் தெரிந்து கொள்ள முடியாது. அவர் எப்படிச் சொல்வார்? அவருக்கென்று ஒரு தன்மானம் சுயமரியாதை இருக்காதா? அதனை விட்டு அவர் சொல்வாரா? பெரும்பாலும் அதற்கு வாய்ப்பில்லை!
இப்படிப்பட்ட சுயமரியாதைக் காரர்களைக் குறித்து அல்லாஹ் இவ்வாறு கூறியுள்ளான் :
‘பூமியில் (தம் தேவைகளுக்காக)ஓடியாடி உழைக்க முடியாத வண்ணம் அல்லாஹ்வின் பாதையில் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டவர்களான வசதியற்றவர்கள்தாம் உங்கள் தர்மங்களுக்கு மிகவும் உரித்தானவர்கள் ஆவர்! (அவர்களைப் பற்றி) அறியாதவர், அவர்களிடமுள்ள தன்னடக்கத்தைக் கண்டு அவர்களை தன்னிறைவு பெற்றவர்கள் என எண்ணுகிறார்கள். அவர்களின் முகங்களைப் பார்த்தே அவர்களின் உண்மை நிலையை நீர் அறிந்து கொள்ளலாம். ஆனால் அவர்களோ மக்களிடம் வற்புறுத்திக் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். (அவர்களுக்காக) நீங்கள் எந்தப் பொருளைச் செலவு செய்தாலும் நிச்சயமாக அதனை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கின்றான்’(திருக்குர்ஆன் 2:273 )
ஒருவரது அண்டை வீட்டார் பசியோடு இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்வதற்கான இரண்டாவது வழி, அவர் பசியோடுதான் இருக்கிறார் என்பதை, அவர் சொல்லாமலேயே அவரின் முகத்தைப் பார்த்தே அவரின் உண்மை நிலையை நீர் அறிந்து கொள்ளலாம் என்று இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அவரது முகத்தைப் பார்த்தே அவரது பசியினை அறிந்து கொள்கிற அளவுக்கு அவருடன் மிகவும் நெருக்கமான தொடர்பையும் உறவையும் பேணிக்கொண்டிருக்க வேண்டும். என்பதுதான் இந்த நபிமொழி நமக்கு உணர்த்தும் செய்தியாகும்!
அண்டை வீட்டாரிடம் நல்ல விதமாக நடந்து கொள்வது குறித்த நபி(ஸல்) அவர்களது அறிவுரைகள் வழிகாட்டுதல்களைப்பெற்ற அன்றைய முஸ்லிம் சமுதாயம் எப்படிப்பட்ட உறவு முறைகளைப் பேணினார்கள் என்பதற்கான ஓர் உணர்வுப்பூர்வமான நிகழ்வைத் தெரிந்து கொள்வோம்.
முன்பு வாழ்ந்து சென்ற ‘ஸலஃப்கள்’ எனும் பெரியார்களைப் பார்த்திருக்கின்றேன். ஒரே வசிப்பிடத்தில் பல குடும்பத்தார்கள் வசிப்பார்கள். சிலபோது ஒரு தோழரிடம் விருந்தாளி வந்திருப்பார். மற்றொரு தோழரின் வீட்டு அடுப்பில் பாத்திரம் ஏற்றப்பட்டிருக்கும்.
விருந்தினரை உடைய தோழர் அதனைத் தூக்கிச் சென்று விடுவார். பிறகு பாத்திரத்தின் சொந்தக்காரர் அதனைத் தேடித் திரிவார். பாத்திரத்தை எடுத்துச் சென்றவர் யார் என்று (அடுத்தவர்களிடம்) கேட்பார். விருந்தினரை உடைய தோழர், ‘நான்தான். எங்களின் விருந்தாளிக்காக அதனை எடுத்துச் சென்றேன்!’ என்று சொல்வார். அதனைக் கேட்டதும் பாத்திரத்தின் உரிமையாளர் ‘இறைவன் இதில் உங்களுக்கு பரக்கத் நற்பேறு ஏற்படுத்தித் தரட்டுமாக!’ என்று இறைஞ்சுவார். இந்த அறிவிப்பாளர் மேலும் கூறுகின்றார்: ‘ரொட்டி சமைக்கும்போது இதுபோன்று நடைபெறுவதுண்டு’ (அறிவிப்பாளர்: முஹம்மத் இப்னு ஸியாத் (ரலி), ஆதாரம் : அல் அதபுல் முஃப்ரத் லி இமாமில் புகாரி)
இந்த நிகழ்வும் ஒரு குடியிருப்புப் பகுதியில் நடந்ததுதான். இந்தக் குடியிருப்பு வாசிகளையும் இப்படிப்பட்ட பரந்த மனப்பõன்மையையும் வாசிக்கும்போது, நமது குடியிருப்புவõசிகளையும் நினைத்துப்பார்த்தால் பெருமூச்சு வருகின்றதா? பெருமூச்சை விட்டு விட்டு இந்த வரலாற்று நிகழ்வை இன்றைக்கும் நடைமுறைப்படுத்துவோம்.