திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சியில் வசித்து வரும் அப்துர் ரஷீத் தாஹிரா பானு தம்பதியரின் மகன் முஹம்மது அனஸ் தனது பள்ளிக் கல்வியை மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முடித்து திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில் வேதியியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறைக்கான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் குஇOக்கூ திட்டம் மூலம் வெளிநாடுகளில் பயிற்சி பெற்று உயரிய நிறுவனங்களில் மாணவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். இதற்காக நடத்தப்பட்ட பல கட்டத் தேர்வுகளில் பங்கேற்ற 7000 பேரில் தேர்ந்தெடுக்கப்பட்ட 21 பேரில் முஹம்மது அனஸûம் ஒருவர்.
டிசம்பர் முதல் வாரத்தில் பயிற்சிக்காக அனஸ் தென் கொரியா செல்ல உள்ளார். பயிற்சி முடிந்த பின்னர் திறமையின் அடிப்படையில் வெளிநாட்டு நிறுவனங்களில் பணியில் அமர்த்திக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
கோவை மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் செண்பகலெட்சுமி, கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், பேராசிரியர் கார்த்திகேயன், பேராசிரியை திலகவதி, வேதியியல் துறைப் பேராசிரியர்கள், கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், கல்லூரியின் நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஹரிதாஸ், அனைத்துத் துறைத் தலைவர்கள், முன்னாள் மாணவர் சங்கத்தினர் பொறுப்பாளர்கள் முஹம்மது அனஸை பாராட்டினர்.
அரசுக் கல்வி நிலையங்களில் கல்வி கற்பவர்களும் சாதிக்கலாம் என்பதற்கு அனஸ் ஒரு முன்மாதிரி. அரசுக் கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்களின் தரத்திற்கும் இவருடைய சாதனை ஒரு சான்று. இவர் தனது கல்விப் பயணத்தில் மேலும் பல படித்தரங்களை அடைந்திட இறைவனிடம் பிரார்த்திப்போம்.
வாழ்த்துகள் முஹம்மது அனஸ்!
கு. சாஹûல் ஹமீது
முஹம்மது அனஸ்