மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

கவிதை

காசாசை அகற்றும் மா மருந்து
மௌலவி ஸய்யித் மஸ்வூத் மஹ்ழரி, பாகவி, 1-15 டிசம்பர் 2025


இரண்டரை விழுக்காடு
ஏழைக்குக் கொடுத்தால்
தொன்னுற்று ஏழரை விழுக்காடு
காக்கப்படும்

புயல் மழை நெருப்பு
பூகம்பம் தொடராமல்
பாதுகாப்பு வளையம் போடப்படும்
அதில் பரக்கத் விதைகள் தூவப்படும்
இருக்கை நபிமார்கள்
வரிசையில் போடப்படும்
சொர்க்க பூமியில் விற்கப்படும்

உங்கள் பெயர்கள்
முன்பதிவு செய்யப்படும்
ஜகாத் வழங்கும்
சீமான்கள் தமக்கு
அல்லாஹ்வின் திருமுகம்
காட்டப்படும்

ஏழைகளின் வரியை
வழங்காத பேர்களை
வானிலும் மண்ணிலும் ஏசப்படும்
நரகில் தனியாக
நெருப்பு மூட்டப்படும்

சேமித்த வெள்ளியைக் காய்ச்சி
சென்னியில் சூடு போடப்படும்
தங்கத்தை உருக்கி
சேறாக வாயில் ஊற்றப்படும்

காசாசை என்னும்
தீராத புற்று நோய்
கல்புக்குள் வளராமல் வெட்டப்படும்
கருமித்தனம் நெஞ்சில்
வளராமல் கட்டுப்படும்

இல்லாத இல்லை
என்கின்ற லட்சியம்
இதனால் மட்டுமே எட்டப்படும்
இதை ஏற்காத
சமுதாயம் வெட்டப்படும்


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர இலக்கியம்

மேலும் தேடல்