"ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்' என்ற கருத்தை மனித உணர்வு கொண்ட யாரும் மறுக்க மாட்டார்கள். ஒழுக்கத்தின் திறவுகோலே இஸ்லாம்தான். இஸ்லாம் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒழுக்க விழுமங் களை வகுத்துத் தந்துள்ளது. இன்றைய சமூக பிரச்னையில் மிக முக்கியமானது பெண்களுக்கானதே. ஒரு பெண்ணை வெறும் விளம்பரப் பொருளாகவும் விற்பனைப் பொருளாகவுமே இச் சமூகம் பார்க்கிறது. பெண்கள் சந்திக்கக் கூடிய பிரச்னைகள் ஏராளம்..! பெண் சிசுக் கொலை, பெண் உயிருடன் கொலை, வரதட்ச ணைக்காகக் கொலை என பிறப்பு முதல் இறப்பு வரை பெண் சமூகம் இன்று வரை போராடிக் கொண்டே இருக்கிறது.

பெண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகளில் மிக முக்கியமானது பாலியல் வன்கொடுமைகள். பொள்ளாச்சி சம்பவம், சிறுமி ஆசிஃபா பாலியல் கொடூரக் கொலை, மைசூர் கூட்டு பாலியல் வன்புணர்வு, 5 வயது சிறுமியின் பாலியல் சம்பவம், தலித் பெண் பாலியல் வன்புணர்வு, கரூர் மாணவி பாலியல் தொல்லையால் தற்கொலை, மாணவி பொன்தாரணி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தற்கொலை, கோயிலில் கூட்டு பாலியல், இவையெல்லாம் மிகச் சமீபமாக நடந்தேறிய பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள். இப்படியே நாம் ஒரு நீண்ட நெடிய பட்டியலைப் போடக் கூடிய அளவிற்கு தான் இன்றைய பெண்களின் பாதுகாப்புச் சூழ் நிலை இருக்கிறது. உலக அளவில் இருக்கும் இந்தப் பிரச்னையைச் சரி செய்யும் ஒரே தீர்வு இஸ்லாத்தில் இருக்கிறது.
இதை உலக அரங்கில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் அங்கீகரிக்கும் பட்சத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு முழுமையாகக் கிடைத்து விடும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. தங்களுக்குத் தாங்களே ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக ஹிஜாப் என்னும் கேடயத்தை இஸ்லாமியப் பெண்கள் அணிந்து வருகிறார்கள். இது ஏன் உலகளவில் சர்ச்சையாகின்றது? ஒரு பெண்ணின் பாதுகாப்புக்கான வழியைக் கண்டுபிடிக்க இயலாதவர்கள் பெண்களின் பாதுகாப்பை உடைப்பதில் மட்டும் ஏன் இவ்வளவு முனைப்புடன் செயலாற்றுகிறார்கள்? ஹிஜாப் பிரச்னை கடந்த இரண்டு மாதங் களாகக் கர்நாடகாவில் நடைபெறுகிறது. இப்பிரச்னை இந்தியாவில் மட்டும் ஆரம் பித்த பிரச்னை அல்ல.
2003ஆம் ஆண்டில் பிரான்ஸ் ஹிஜாப் அணியத் தடை விதித்தது. 2009இல் ஜெர்மனியில் 32 வயது மர்வா அல் ஷர்பினி என்ற பெண் ஹிஜாப் அணிந்ததால் கொலை செய்யப்பட்டார். அமெரிக்காவில் ஹிஜாப் அணியும் பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். தற்போது இந்தி யாவிலும் சற்று தலை தூக்குகிறது. ஹிஜாபை தடை செய்தும் விமர் சித்தும் வருபவர்களுக்கு ஹிஜாபின் மகத்துவமும் அதன் பாதுகாப்பும் புரிய வில்லை. இஸ்லாத்தின் மீது காழ்ப்பு உணர் வும், பெண்களின் அழகை ரசிக்க வேண்டும் என்கிற மட்டமான சிந்தனை கொண்டவர்களையும் தவிர வேறெவரும் ஹிஜாப் குறித்து, இஸ்லாம் இயம்பும் ஆடை அமைப்பு குறித்து விமர்சனம் செய்யமாட்டார்கள்.
இஸ்லாமியப் பெண்கள் அணியும் இந்த ஹிஜாப் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அணிகிறார்கள், அந்த ஆடையால் அவர்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள், என ஒன்றுக்கும் உதவாத பல கருத்துகளை மக்கள் உள்ளத் தில் திணிக்கிறார்கள். ஹிஜாப் அணிவது ஒரு பெண்ணின் பாதுகாப்பிற்கõகத்தான். ஹிஜாபை அணிவதால் அவளின் அறிவோ திறமையோ எங்கும் மறைக்கப்படவில்லை. ஒலிம்பிக்கில் அமெரிக்காவுக்காகப் போட்டியிடும் போது ஹிஜாப் அணிந்த முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றவர் இப்தி ஹாஜ். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் பெண் முஸ்லிம் அமெரிக்க தடகள வீராங்கனை ஆவார். பதக்கப் போட்டியில் இத்தாலியை 4530 என்ற கணக்கில் தோற்கடித்ததன் மூலம் சேப்ரே அணியில் வெண்கலப் பதக்கம் பெற்றார்.
ஆடை குறைபாடுகள் ஏற்படுத்தும் ஆபத்துகள் பிரபல கிளினிக்கல் மனோதத்துவ நிபுணரும், இஸ்ரேல் டெல்ஹாய் கல்லூரி யின் பெண் கல்வித்துறைத் தலைவரு மான அவிகைல் மூர் "பெண்களின் ஆடைக் கும், பாலியல் வன்முறைகளுக்கும் இடை யிலான தொடர்பைக் குறித்து ஓர் ஆய்வை நடத்தினார். உடல் பாகங்கள் வெளியில் தெரியும்படி ஆடை அணியும் பெண்களைக் காணும் போது ஆண்களுக்கு உண்டாகும் பாலியல் உணர்வு எவ்வளவு என்று கண்டு பிடிப்பதுதான் அந்த ஆய்வின் பிரதான நோக்கமாகும்.
அவர் ஆய்வை நடத்தி முடித்த பின்னர் மக்கள் மன்றத்தில் தம் ஆய்வறிக் கையை சமர்ப்பித்தார். Journal Of International Women`s Studies எனும் பெயரிட்ட அந்த ஆய்வறிக்கை, ஆய்வில் பங்கெடுத்த ஆண்களில் 29.8 விழுக்காட்டினருக்கு பெண்களை அரைகுறை ஆடைகளில் பார்க்கும் போதெல்லாம் பாலியல் தூண்டல் உணர்வு ஏற்பட்டதாகக் கூறுகிறது. "58.1 விழுக்காட்டினருக்கு பெரும் பாலான சமயங்களில் உடல் பாகங்கள் வெளியில் தெரியும்படி ஆடை அணியும் பெண்களைக் கண்டால் பாலியல் தூண்டல் உணர்வு ஏற்படுகிறது' (Journal Of International Women`s Studies, Vol. II 4 May 2010) அதாவது, அரைகுறை ஆடைகளை அணியும் பெண்களைக் காண்கிற 88 விழுக் காட்டு ஆண்களுக்குப் பாலியல் தூண்டல் உணர்வு ஏற்படுவதாக அவர் தெரிவித்திருந் தார். ("இஸ்லாம்: சந்தேகங்களும் தெளிவு களும்' எனும் நூலின் 27 ஆம் பக்கத்திலிருந்து) ஹிஜாப் பெண்களுக்குப் பாதுகாப்பானது மட்டுமில்லை. அவளது உரிமையும் கூட. ஹிஜாப் பெண்களின் திறமையையும் அறிவையும் தடை விதிக்கவில்லை. ஹிஜாப் சாதித்ததும் ஏராளம். ஹிஜாபை அணிந்து சாதித்தவர்களும் ஏராளம். ஹிஜாப் அணிந்து சாதிப்போம்.!