மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

சமய நல்லிணக்கப் பேரவையின் தொடக்கப் புள்ளி
தொகுப்பு: ஆ.சையத் இப்ராஹீம், Feb 16-28


ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகரத்தின் சார்பாக சமூக முன்னேற்றத்திற்கான உரையாடல்(Dialogue For Social Empowerment) 2026 ஜனவரி 27ஆம் நாள் கோவை சிறுதுளி அரங்கில் நடைபெற்றது.ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகரத் தலைவர் P.S.உமர் ஃபாரூக் தலைமை தாங்கிய இந்த நிகழ்வை ஆசிரியர் சலீம் வழிநடத்தினார்.

இந்த நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் சையத் சாதத்துல்லாஹ் ஹுஸைனி,ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு மாநிலத் தலைவர் மௌலவி முஹம்மது ஹனீஃபா மன்பீ,Universal Peace Foundation அமைப்பின் நிறுவனர் சிவாத்மா குருஜி,ரோமன் கத்தோலிக்க சர்வ சமயப் பொறுப்பாளர் அருட்தந்தை தன்ராஜ்,குருத்வாரா சபையின் சார்பில் டோனி சிங் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

ஜெயின் சமூகத்தின் சார்பில் அரவிந்த் ஷா ஜெயின்,TASK அமைப்பின் தலைவர் குருதீப் சிங் ஆனந்த்,RAAC அமைப்பின் செயலாளர் ரவீந்திரன்,யுனிவர்செல் பிரதர்ஹுட் அமைப்பின் சார்பில் நந்தகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடைபெற வேண்டும்.நாம் ஒருவரையொருவர் நெருங்கிப் பழகவும்,புரிந்து கொள்ளவும் இந்த நிகழ்வு அவசியம்.கோவையில் சமய நல்லிணக்கப் பேரவை தொடங்கப்பட வேண்டும் என்பதை நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய ஆன்மிகத் தலைவர்கள் வலியுறுத்தினர்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் சையத் சாதத்துல்லாஹ் ஹூஸைனி தமது உரையில் முதல்நாள் நடைபெற்ற குடியரசு தினத்தை நினைவு கூர்ந்தார். ‘நாம் பல மதங்கள்,மொழிகளைக் கொண்டிருந்தாலும் ஒன்றுபட்டு,ஒற்றுமையாக வாழ்வது நமது நாட்டின் பன்மைத் தன்மைக்கு அடித்தளமாகும்.ஒரே மாதிரியாக,ஒன்றாக ஆகி விடுவது என்பதல்ல, நாம் வெவ்வேறு கருத்துகளைக் கொண்டிருந்தாலும் ஒற்று மையாக ஒருமைப்பாட்டுடன் வாழ்வதுதான் நமது முதிர்ச்சியைக் காட்டுகிறது. பல்வேறு நாடுகள் இதைக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

‘நீதி,சமூக,பொருளாதார அரசியல் சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானது.சிந்தனை உரிமை பேச்சு,எழுத்து உரிமைகள் அனைவருக்கும் பொதுவானவை' என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.எனவே அவற்றை நாம் நிலைநாட்ட பாடு பட வேண்டும்.

C-Consciousness, I-Integrated Action of Like Minded People,V-Vigilance,I-Institutional Reform,C-Constitutional Culture.இந்த வகையான CIVIC (குடிமையியல்) தான் இன்றைய தேவை' என்றார்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு தலைவர் மௌலவி ஹனீஃபா மன்பீ பேசும் போது,‘நீங்கள் நன்மையான காரியங்களில்  ஒருவருக்கொருவர் உதவியாளராக இருங்கள்.தீமையான காரியங்களில் ஒருவருக்கொருவர் உதவாதீர்கள்'என்று திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது.அந்த அடிப்படையில் சமூக மேம்பாடு எனும் நன்மையான செயலுக்காக நாம் ஒருவருக்கொருவர் உதவக்கூடியவர்களாக அதை மேம்படுத்தக் கூடியவர்களாகத் திகழ வேண்டும் என்று குறிப்பிட்டார்.

சிவாத்மா குருஜி தமது உரையில்,‘நாம் எப்போதோ ஒரு முறை கூடினோம்.பேசிக் கலைந்தோம் என்று இருக்கக் கூடாது.நாம் தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகளை நடத்த வேண்டும்.அதற்காக ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும்.தனி மனிதர்களுக்கிடையே உள்ள தவறான சிந்தனையை,தவறான புரிதல்களை நீக்குவதற்காக அந்த அமைப்பு முயல வேண்டும்.தனி நபருக்கு ஏற்படும் தவறான புரிதலும் சிந்தனையுமே சமயங்களுக்கிடையே பிரிவினையை வெறுப்பு உணர்வை விதைக்கக் காரணமாகி விடுகிறது. எனவே சமயங்களுக்கிடையே ஒற்றுமையை,ஒருமைப்பாட்டை,புரிந்துணர்வை ஏற்படுத்த இது போன்ற அமைப்புகள் தேவை'என்று வலியுறுத்தினார்.

CSI திருப்பள்ளியைச் சேர்ந்த அருட்தந்தை கருணாகரன்,திவ்யோதயா இயக்குநர் அருட்தந்தை வில்சன்,சிறுதுளி அமைப்பின் சின்னசாமி,ஓசை அமைப்பின் சையத்,
பசுமைத்தாயகம் அமைப்பின் ராஜேந்திரன்,ஈர நெஞ்சம் அமைப்பின் மகேந்திரன்,சமூக செயல்பாட்டாளர்களான சிராஜ்,மேட்டுப்பாளையம் மணி,ஜவஹர்,TELC,ரிதம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த-வர்கள்,கல்வியாளர்கள் பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மக்கள் தொடர்புச் செயலாளர் அப்துல் ஹக்கீம் நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்தார்.ஜமாஅத்தே இஸ்-லாமி ஹிந்த் மாநில,மாவட்டப் பிரதி நிதிகளும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்