மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

சிறுமிகளைச் சீரழிக்கும் கொடூரம் முற்றுப் பெறுவது எப்போது?
வி.எஸ்.முஹம்மத் அமீன் , October 1-15,2026


2025 அக்டோபர் 6ஆம் நாள் குழந்தை உரிமை ஆர்வலர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தின் கீழ் உள்ள பாலியல் தடுப்புப் பிரிவில் பென் டிரைவ் ஒன்றைக் கொடுத்-தார். 2019ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமையில் முதியவர் ஒருவர் ஈடுபடுத்தும் சிசிடிவி காட்சி அது.

சிசிடிவி காட்சி தெளிவாக இல்லை என்பதால் அதிலுள்ளவர்களை அடையாளம் காண முடிய வில்லை, சிசிடிவி காட்சிகள் ஆறாண்டுகளுக்கு முன்புள்ளதால் அதனை மீட்க முடிய-வில்லை, புகாரில் வலுவான ஆதாரம் இல்லை என்று கூறி 2026 பிப்ரவரியில் இந்த வழக்கை முடித்து வைக்குமாறு சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் காவல்துறை இறுதி அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தர-விட்டது.

விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் 84 வயதான கீ. வீரமணி போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். 20 ஆண்டுகளாக ஆதரவற்ற ஏழை பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு உதவுவது போல பங்களாவுக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள் ளார் வீரமணி. இதற்கு உடந்தையாக இருந்த அவரது உதவியாளர் சாந்தி, ஜெம் நிறுவனத்தில் பணிபுரியும் சாந்தியின் கணவர் சிம்ஹன் ஆகியோரையும் கைது செய்து காவல் துறை விசாரித்து வருகிறது.

இந்தக் கொடூரக் குற்றத்தில் வீரமணிக்கு நெருக்கமான தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோருக்கும் பங்கு இருப்பதாகச் செய்திகள் வெளிவந்து பெரும் அதிர் வலையை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையைச் சேர்ந்த சில உயர் அதிகாரிகள் வீரமணியை மிரட்டி 50 கோடிக்கும் மேல் இலஞ்சமாகப் பெற்றுள்ளதாகவும், சிறையில் வீரமணியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.

வீரமணியின் வீடு, அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 10க்கும் மேற்பட்ட சிறுமிகள் வன்கொடுமைக்கு ஆளான வீடியோக்கள், புகைப்படங்கள் பறிமுதல் செய்யப்-பட் டுள்ள நிலையில் 9 பேர் தாங்கள் சிறுமிகளாக இருந்தபோது வீரமணியால் பாதிக்கப்பட்டதாக ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளனர்.

2003ஆம் ஆண்டிலிருந்தே இது குறித்த புகார்கள் எழுந்ததாகவும் கடந்த ஆட்சிக் காலங் களில் இந்தப் பிரச்னையில் உரியமுறையில் கவனம் செலுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ‘குழந்தைகளின் வாழ்வைச் சீரழிக்கும் கொடூர குற்றத்தைச் செய்வது ஆதாரங் களுடன் சிக்கியும் இந்த வழக்கை முடித்து வைக்கச் சொன்னது யார்?, இதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடந்த ஆட்சியில் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்?' என்ற கேள்வியை இன்றைய ஆளும் கட்சி எழுப்பியுள்ளது.

பணபலம், அதிகார பலம், காவல்துறையின் ஒத்துழைப்பு இல்லாமல் இத்தகைய இழி செயல் அரங்கேறியிருக்க முடியாது. சிறுமிகளைச் சீரழித்த இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து விரிவான, முழுமையான விசாரணை நடைபெற வேண்டும். உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் யாராக இருந்தாலும் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். தண்டனைகளை அதிகப்படுத்தாதவரை குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்பு இல்லை. அரசியல் விருப்பு வெறுப்புகளைத் தாண்டி இந்த வழக்கில் நேர்மையான விசாரணை நடத்தப்படுவது3டன் பெண் குழந்தைகளின் பாதுகாப்பையும் அரசு உறுதி செய்ய வேண்டும்


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்