வானங்கள் மற்றும் பூமியிலுள்ள ஒவ்வொன்றுக்கும் உரிமையாளனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்!1 மேலும், மறுமையிலும்கூட புகழ் அவனுக்கே உரித்தானது.2 அவன் நுண்ணறிவாளனாகவும், யாவும் தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.3 பூமியினுள் செல்பவற்றையும் அதிலிருந்து வெளிப்படுபவற்றையும் வானத்திலிருந்து இறங்குகின்றவற்றையும் அதில் ஏறுகின்றவற்றையும் ஆக எல்லாவற்றையும் அவன் நன்கறிகின்றான். அவன் தனிப்பெருங் கிருபையாளனாகவும் பெரும் மன்னிப்பாளனாகவும் இருக்கின்றான்.4 ‘மறுமை நாள் நம்மீது வராமலிருக்கின்றதே! என்ன விஷயம்?’ என்று நிராகரிப்பாளர்கள் கேட்கின்றார்கள்.5 கூறுங்கள்: ‘மறைவானவற்றை அறியக்கூடிய இறைவன்மீது ஆணையõக! அது உங்கள் மீது வந்தே தீரும்.6 வானங்களிலும் பூமியிலும்அணு அளவு பொருள்கூட அவனைவிட்டு மறைந்திருக்கவில்லை. அணுவைவிடச்சிறியதோ, அதைவிடப் பெரியதோ அனைத்துமே ஒரு தெளிவான ஏட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.’
அத்தியாயம் 34 ஸபா · திருவசனங்கள் : 1 - 3
1. ஹம்து என்கிற சொல் அரபி மொழியில் புகழ்ந்துரைத்தல், நன்றி தெரிவித்தல் ஆகிய இரண்டுக்குமே ஆளப்படுகின்றது. இங்கு இந்த இரண்டு பொருள்களுமே பொருந்தும். இந்தப் பேரண்டம் முழுவதற்கும் இதில் இருக்கின்ற ஒவ்வொன்றுக்கும் அல்லாஹ் தான் உரிமையாளன் எனும்போது இந்தப் பேரண்டத்தில் திரும்பும் திசையெங்கும் அளப்பரிய அளவில் காணப்படுகின்ற அழகு, நேர்த்தி, ஒழுங்கு, முழுமை, ஆற்றல், விவேகம், செயல்திறன், செயல்நேர்த்தி, கலை எழில் ஆகிய அனைத்துக்காகவும் புகழ்ந்துரைத்தலுக்கும் பாராட்டுக்கும் உரித்தõனவன் அவன் மட்டுமே. மேலும் இந்தப் பேரண்டத்தில் இருக்கின்றவன் இதில் இருக்கின்ற எந்தவொரு பொருளிலிருந்தும் எந்தவொரு பயனை அடைந்தாலும் அல்லது சுவையை நுகர்ந்தாலும் அல்லது இன்பம் அடைந்தாலும் கூட அந்த அல்லாஹ்வுக்கே அவன் நன்றி செலுத்த வேண்டியவனாக இருக் கின்றான். இவற்றுக்கு உரிமையாளராய் வேறு எவருமே இல்லாத போது அவன் அல்லாத வேறு எவருக்கும் நன்றி செலுத்துவதற்கான, புகழ்ந்துரைக்கப்படுவதற்கான தகுதி இருப்பதில்லை.
2. இந்த உலகத்தின் அத்துணை அருள் வளங்களும் வெகுமதிகளும் அவனõல் அருளப்பட்டவையாகவே இருப்பதைப் போன்றே மறுமையிலும் ஒருவருக்கு என்னவெல்லாம் கிடைத்தாலும் அவையனைத்துமே அவனுடைய கருவூலங்களிலிருந்தே, அவனõலேயே அருளப்பட்டவையாய் இருக்கும். இதனால் மறுமையிலும் அவன் மட்டுமே புகழ்ந்துரைக்கப்படுவதற்கும் நன்றி செலுத்தப்படுவதற்கும் தகுதியானவனாக இருப்பான்.
3. அவனுடைய அத்துணை பணிகளும் செயல்நேர்த்தியையும் உச்சபட்ச ஞானத்தையும் அறிவார்ந்த பின்புலத்தையும் கொண்டிருக்கின்றன. அவன் எதைச் செய்தாலும் சிறப்பாக, செம்மையாக, சரியாகச் செய்கின்றான். மேலும், அவனுக்கு தன்னுடைய ஒவ்வொரு படைப்பைக் குறித்தும் முழுமையான அறிவு அது எங்கே இருக்கின்றது, எந்த நிலையில் இருக்கின்றது, அதன் தேவைகள் என்னென்ன, அதன் நலன்களுக்கு உகந்தது எவை, அது இதுவரை என்ன செய்திருக்கின்றது, மேலும் அதன் மூலமாக இனி வருங்காலத்தில் என்னவெல்லாம் நிகழவிருக்கின்றது ஆகியவற்றைப் பற்றிய அறிவு இருக்கின்றது. அவன் தான் படைத்த இந்த உலகத்தைப் பற்றி அறியாதவனாக இல்லை. அதற்கு மாறாக அவன் இந்தப் பேரண்டத்தின் ஒவ்வொரு அணுவைக் குறித்தும் முழுமையாகவும் துல்லியமாகவும் அறிந்தே இருக்கின்றான்.
ஒவ்வொரு படைப்பைக் குறித்தும் முழுமையான அறிவு அது எங்கே இருக்கின்றது, எந்த நிலையில் இருக்கின்றது, அதன் தேவைகள் என்னென்ன, அதன் நலன்களுக்கு உகந்தது எவை, அது இதுவரை என்ன செய்திருக்கின்றது, மேலும் அதன் மூலமாக இனி வருங்காலத்தில் என்னவெல்லாம் நிகழவிருக்கின்றது ஆகியவற்றைப் பற்றிய அறிவு இருக்கின்றது. அவன் தான் படைத்த இந்த உலகத்தைப் பற்றி அறியாதவனாக இல்லை. அதற்கு மாறாக அவன் இந்தப் பேரண்டத்தின் ஒவ்வொரு அணுவைக் குறித்தும் முழுமையாகவும் துல்லி யமாகவும் அறிந்தே இருக்கின்றான்.
4. அவனுடைய இராஜ்ஜியத்தில் ஒருவரோ ஒரு குழுவினரோ அவனுக்கு எதிராகக் கலகம் செய்தாலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதாலேயே இந்த உலகத்தை எந்த வகையான சட்ட ஒழுங்கும் இல்லாத, தடி எடுத்தவன் தண்டல்காரன் என்கிற அளவுக்கு ஆளாளுக்கு ஆட்டம் போடுகின்ற உலகமாக நினைத்துக் கொள்ளக் கூடாது. அதற்கு மாறாக வல்லோன் அல்லாஹ் அளவிலாக் கருணையுள்ளவனாக, பெரும் மன்னிப்பாளனாக இருப்பதும் பிழைகளைப் பொறுத்தருள்வது அவனுடைய பழக்கமாக இருப்பதும்தான் அதற்கான உண்மையான காரணம் ஆகும். பாவியையும் குற்றவாளியையும் குற்றமும் பாவமும் நிகழ்ந்துவிட்ட அந்தக் கணத்திலேயே பிடித்து விடுகின்ற,அவனுக்கான உணவாதாரங்களை முடக்கி விடுகின்ற, அவனுடைய உடலை முடக்கிவிடுகின்ற, அவனை அந்த நிமிடத்திலேயே உடனுக்குடன் மாய்த்துவிடுகின்ற இவையனைத்தையும் உடனுக்குடன் செய்து முடிக்கின்ற ஆற்றலும் வல்லமையும் அல்லாஹ்வுக்கு உண்டு. என்றாலும் அவன் அவ்வாறு நடந்துகொள்வதில்லை. தனக்குக் கீழ்ப்படிந்து நடக்க மறுத்தும், தனக்கு எதிராகக் கலகம் செய்யத் துணிந்தும்முரண்டு பிடிக்கின்ற அடியார்களுக்கு அவன் நினைத்ததை முடிக்கின்ற பெருவல்லமை பெற்ற நிலையிலும் கால அவகாசம் தருகின்றான்; தம்மைத் தாமே சீர்திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பை அருளுகின்றான்; அவர்கள் தம்மைத் திருத்திக் கொண்டு அவனிடம் மீளுகின்ற போதெல்லாம் அவன் அவர்களை ஏற்றுக்கொள்கின்றான்.
5. இவர்கள் இதனை எதுவும் தெரியாத, எதைப் பற்றியும் அறியாத தொனியில் கேலியாகவும் கிண்டலாகவும் எகத்தாளத்துடன் சொல்லி வந்தார்கள். ‘ரொம்பக் காலமாக இந்த இறைத்தூதர் மறுமைநாள் வரப் போவதற்கான செய்தியைச் சொல்லிக் கொண்டே இருக்கின்றார். ஆனால் அது வருவதற்கான எந்தச் சுவடும் தெரியவில்லை; வருகின்ற வழியில் எங்கே சிக்கி விட்டது என்பது பற்றியும் ஒரு துப்பும் இல்லை. எத்தனை எத்தனை முறை நாம் இவரைப் பொய்யராக ஆக்கியிருக்கின்றோம்..! இவருடைய பேச்சு களையெல்லாம் பொய்யாக்கியிருக்கின்றோம்; எவ்வாறெல்லாம் அவமதித்திருக்கின்றோம்..! இவரைக் கிண்டல் செய்திருக்கின்றோம். ஆனால், இந்த மறுமையோ ஒரேஒரு முறை எட்டிக் கூடப் பார்க்க மாட்டேன் என்கிறதே!’ என்கிற ரீதியில் அவர்களின் எகத்தாளப் பேச்சு இருந்தது.
6. எல்லாம் வல்ல இறைவனின், பரிபாலிப்பவனின் மீது சத்தியம் செய்வதற்காக அவனுடைய ‘மறைவானவற்றை அறியக்கூடிய’ பண்பு ஆளப்பட்டிருப்பதே, ‘மறுமைநாள் வருவது உறுதி. ஆனால், அதுவரக்கூடிய நேரம் பற்றிய அறிவு மறைவானவற்றை அறிந்தவனைத் தவிர வேறுஎவருக்கும் இல்லை’ என்பதைச் சுட்டிக்காட்டுவதாக அமைந்துவிட்டது. இதே கருத்து மகத்துவம் மிக்க குர்ஆனில் அநேக இடங்களில் வெவ்வேறு விதங்களில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. விவரங்களுக்குப்பார்க்க: திருக்குர்ஆன் 7:187; 20:15; 31:34; 33:63; 67:25,26; 79:4244.
(தொடரும்)
(தொடரும்)