வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி கற்பதற்கான முக்கியக் காரணமாக உள்ளவை எவை என்பதைக் கவனிப்போம். எதிர்காலத்திற்கான பல்வேறு வகையான சிறந்த கல்வி கற்கும் வாய்ப்பு இந்தியாவை விட வெளிநாட்டில் உள்ளது என்கிற எண்ணம் ஆகும். இந்தியாவிற்குத் திரும்பி வரும் போது அல்லது பிற நாடுகளில் நல்ல வேலைகள் கிடைக்கும் என்கிற கனவு உள்ளது.
பல்வேறு வகையான கலாச்சாரங்களை உணரும் வாய்ப்பு, அனுபவங்கள் கிடைக்கும் என்கிற எண்ணங்கள் சிலருக்கு உள்ளது. ஸ்காலர்ஷிப், வசதியான பின்னணி இருப்பதும் முக்கியக் காரணமாகும். இந்தியாவில் சிலருக்கு மருத்துவம் போன்ற படிப்புகள் கற்க வாய்ப்புக் கிடைக்காமல் போய்விடுகிறது.
மருத்துவம் தான் படிக்க வேண்டும் என்பது மட்டுமின்றி பிற நாடுகளில் குறைவான செலவில் மருத்துவக் கல்வி கற்க முடியும் என்கிற நம்பிக்கையும் உள்ளது. இது போல பல காரணங்களால் வெளிநாடுக்குச் சென்று கற்கின்றனர்.
வெளிநாடு சென்று கல்வி கற்கலாமா? என்கிற எண்ணம் வரும் போது பல கேள்விகள் மனதில் எழும். வெளிநாட்டில் படிக்கலாம் என்று திட்டமிடும் போது பல வகையான புதிர்களும் குழப்பங்களும் ஐயங்களும் எழும். குறிப்பாக எந்த நாடு பாதுகாப்பானது, எனக்கு ஏற்ற கல்வி ஏது, கல்விக்கேற்ற பல்கலைக்கழகம் எது? செலவுகள் கட்டுக்குள் இருக்குமா? ஸ்காலர்ஷிப் கிடைக்குமா? பண உதவி கிடைக்குமா? வேலை வாய்ப்புகள் உள்ளனவா? என்பது போன்ற முக்கிய கேள்விகளுக்கு விழிப்பு உணர்வு ஏற்படும் முன் வெளிநாட்டின் இன்றைய நிலை என்ன என்பதைக் கவனிப்போம்.
2021இன் அதிகாரப்பூர்வமாக இராஜ்ய சபையில் வெளியிடப்பட்ட தகவல்களின்படி 11 இலட்சம் இந்தியர்கள் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கல்வி கற்கின்றார்கள். அதிகமானோர் படிக்கும் நாடாக இருப்பது யுனைடட் அரபிக் எமிரேட் தான்.
வெளிநாடு செல்லும் இந்தியர்கள் 2021
யு.ஏ.இ. 219000, கனடா 215720, அமெரிக்கா 211930, ஆஸ்திரேலியா 92383, சவுதி அரேபியா 80800, யு.கே. 60465, முன்னாள் சோவியத் ஒன்றியம் 60000, ஓமன் 43600, நியூசிலாந்து 30000, சீனா 23000, ஜெர்மனி 20810, பிலிப்பைன்ஸ் 15000, பங்களாதேஷ் 5200, பிற நாடுகள் 53540 (ஆதாரம்: மாநிலங்களவை நடவடிக்கைகள் 22 ஜýலை 2021) எனினும் 96 விழுக்காட்டினர் படிப்பது 17 நாடுகளில் தான். 202425 இல் அமெரிக்காவில் தான் அதிகம் பேர் படிக்கச் சென்றனர். தற்போது அமெரிக்காவைப் பற்றி பெரிதும் பேசப்படுகிறது. நியூயார்க்கைச் சார்ந்த சர்வதேசக் கல்வி இன்ஸ்டிடியூட் அளித்த தகவலின் படி அமெரிக்காவின் உயர் கல்வியில் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 6.1 விழுக்காடு மாணவர்கள் ஆவார்கள். 2000-01ஆம் ஆண்டு 54 இலட்சம் பேர் படித்தனர். 2024-25ஆம் ஆண்டு 1 கோடியே 17 இலட்சம் பேர் படிக்கின்றனர்.
இதில் அதிக அளவில் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் 31 விழுக்காட்டினர் ஆவார்கள். இதைத் தொடர்ந்து சீனாவிலிருந்து வந்தவர்கள் 23 விழுக்காட்டினர் ஆவார்கள். அமெரிக்காவில் ஆப்ஷனல் ப்ராக்டிகல் டிரைனிங் செல்பவர்களில் 49 விழுக்காட்டினர் இந்தியர்கள் ஆவார்கள். அதாவது (OPT) என்பது கல்வி சார்ந்த பணிகள் செல்பவர்கள். 2014-15ஐ ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை 2024-25 இல் இரு மடங்கு அதிகரித்துள்ளது. அனைத்து நாடுகளை விட இந்தியர்கள் தான் STEM (Science, Technology, Engineering and Mathematics)பிற நாடுகளை விட அதிகமானவர்கள் ஆவார்கள்.
வெளிநாடுகளில் படிக்க வேண்டுமானால் கட்டாயமாக TOFEL, IELTS, SAT, GRE, GMAT போன்ற தேர்வுகளை வெற்றிகரமாக முடிக்க வேண்டும். இந்தத் தேர்வுகளில் பொதுவாக இரு வகையான கேள்விகள் இருக்கும். முதலாவது ஆங்கில அறிவு அடிப்படையானது இரண்டாவது திறன்(Skill) அடிப்படையானது. இதற்கு நீண்ட காலப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சரியாக முயன்றால் வெற்றி பெற்று வெளிநாடு சென்று படிப்பது அனைவராலும் இயலும்.
மேலும் விவரங்களுக்கு :
வாஜித் ஷா 9884227669