மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

அண்ணா பல்கலைக்கழக மோசடி
அறப்போர் இயக்க ராதாகிருஷ்ணன், 16-30 செப்டம்பர், 2024



 

இந்த நேர்காணலை முழுமையாகக் காண : https://youtu.be/T-Y2xtx8444?si=hgSlV0B8SaTMdBT4


ஒரு கல்லூரியை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கத் தேவைப்படும் தகுதிகள் என்ன? AICTE குறித்துச் சொல்லுங்களேன்.!

இந்தியாவில் எங்கு பொறியியல் கல்லூரி தொடங்கினாலும் AICTE (தொழில்நுட்பக் கல்விக்கான அனைத்து இந்திய கவுன்சில்) அனுமதி பெற வேண்டும். ஒரு கல்லூரி தொடங்க வேண்டும் என்றால் அதற்குச் சில நிபந்தனைகள் உள்ளன. அதாவது குறிப்பிட்ட அளவு உள்கட்டமைப்பு, போதிய அளவு பேராசிரியர்கள் இருக்க வேண்டும். பேராசிரியர்கள் அளவிற்கு ஏற்ப எவ்வளவு மாணவர்களைக் கல்லூரியில் இணைக்க வேண்டும் என்றெல்லாம் AICTE தான் முடிவு செய்வார்கள். இந்த விதிகளின் அடிப்படையில் தான் ஒரு கல்லூரி தொடங்க முடியும். ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்ளக்கூடிய வகையில் இருக்கும் இந்த அனுமதியை முதல் முறை AICTE ஆய்வு செய்து அனுமதி கொடுத்தவுடன் ஆண்டுதோறும் அதே தகுதிகளுடன் அந்தக் கல்லூரி இருக்கின்றதா என ஆய்வு செய்ய வேண்டியது அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் CAI(Center For Affliation Of Institutions)வின் பொறுப்பு. இவர்களே ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு மேற்கொண்டு இந்த அனுமதியைப் புதுப்பிப்பார்கள்.

ஒவ்வொரு ஆண்டின் ஆய்வின்போதும் கல்லூரிகள் தங்களுடைய மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்திக்கொள்ள அனுமதி கேட்பார்கள். எடுத்துக்காட்டாக ஒரு கல்லூரி ஒரு வகுப்பறையில் 60 மாணவர்களைச் சேர்க்க அனுமதி கோரினால் அதற்குரிய பேராசிரியர்கள் அவர்களிடம் இருக்க வேண்டும். இதை SSR (or) SFR 1:2:6 என்ற விகிதம் கொண்டு முடிவு செய்வார்கள். 60 மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என்றால் ஒரு பேராசிரியர், இரண்டு இணை பேராசிரியர்கள், ஆறு துணை பேராசிரியர்கள் இருக்க வேண்டும். இந்த விகிதத்தில் இருந்தால்தான் 60 மாணவர்களைச் சேர்க்க அனுமதி வழங்கப்படும்.

காரணம் இப்பொழுது துணைப் பேராசிரியர் என்பவர் பி.இ அல்லது எம்.ஏ முடித்து புதிதாகச் சேர்ந்திருப்பார். அவருக்கு எந்த முன் அனுபவமும் இருக்காது. ஆனால் இணை பேராசிரியராக இருப்பவர் இரண்டு, மூன்று ஆய்வுக் கட்டுரைகள் அல்லது சர்வதேச இதழில் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டு இருக்க வேண்டும். இதைப் போல் தலைமைப் பேராசிரியராக இருப்பவர் நூல் வெளியீடு செய்திருக்க வேண்டும். இவ்வாறான பேராசிரியர்களைக் கொண்ட ஒரு கல்லூரி உலகத்தரம் வாய்ந்த சிந்தனையை மாணவர்களுக்குக் கொடுக்க முடியும் என்ற அடிப்படையில் தான் இந்த விகிதாச்சார அடிப்படையில் அனுமதி தருகின்றன. பேராசிரியர்களின் தரம்தான் மிக மிக முக்கியம். ஒரு பிஎச்டி முடித்த பேராசிரியர் இருந்தால்தான் அந்த டிபார்ட்மெண்டுக்கு அனுமதி கிடைக்கும். இதுதான் குறைந்தபட்சத் தேவை. மற்ற கல்லூரிகளுக்கு இது வேறுபடும். இந்தத் தகுதிகள் இருந்தால் தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் உறுப்பு பல்கலைக்கழகமாக அனுமதி தரப்படும்.

அண்ணா  பல்கலைக்கழகத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி வருகின்றீர்கள்? என்ன முறைகேடு? இதை எவ்வாறு கண்டறிந்தீர்கள்?

கடந்த மார்ச் மாதம் அறப்போர் இயக்க அலுவலகத்தில் தன்னார்வலர்கள் கூட்டம் ஒன்றை நடத்தினோம். அதில் ஒரு வயதான நபர் வருத்தப்பட்டு எங்களிடம் பேசினார். ‘அவரை ஹோட்டலுக்கு வரச் சொல்லிக் கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள். ஏன் என்னிடம் கையெழுத்து வாங்குகிறீர்கள் என்று அவர் கேட்டதற்கு எங்கள் கல்லூரியில் உங்களைப் பேராசிரியராகக் கணக்குக் காட்டுவதற்காக வாங்குகின்றோம் என அவர்கள் கூறியவுடன் அவர் பயந்து விட்டார். இதே போல் நிறைய போலி பேராசிரியர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் வகுப்பறைகளுக்குக் கூடச் செல்வதில்லை. எனவே உங்களால் முடிந்த முயற்சியை எடுங்கள் எனச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். அதற்குப் பின்னர் தான் எங்களுக்கு இதில் ஏதோ முறைகேடு நடப்பதாக ஐயம் எழுந்தது.

அதிலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் எப்படி இவ்வாறு நடைபெறும் எனத் தோன்றியது. அதன் பின்னர் தான் இதைத் தொடர வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக வலைதளத்தைப் பின் தொடர்ந்தோம். அப்பொழுது மார்ச், எப்ரலில் 2022, 2023 ஆண்டிற்கான தகவல்களைச் சேகரித்துக் கொண்டிருக்கும் போதே CAIவின் அன்றைய இயக்குநராக இருந்த இளையபெருமாள் அடுத்த ஆண்டு ஆய்விற்காகத் தகவல்களைத் தயார் செய்து வைத்துக் கொள்ளுமாறு கல்லூரிகளுக்கு அறிவிப்பு விடுத்தார். இதன் பின்னரே இந்த அமைப்பின் செயல்முறைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து கொண்டோம். பின்னர் பழைய, புதிய தகவல்கள் என 480 PDFகள் அனைத்தையும் சேகரித்தோம். இதை ஒழுங்குபடுத்துவதில் நிறைய சிக்கல்களைக் காண்கிறோம். அதற்கு ஒரு முக்கியக் காரணம் ஒரே நபர் பல கல்லூரிகளில் சிறு சிறு மாற்றங்களுடன் தன்னைப் பதிவு செய்து கொண்டதே! தங்கள் பெயரில் சிறு மாற்றங்கள் மேற்கொள்வது, வெவ்வேறு புகைப்படங்கள் கொடுப்பது, தான் படித்த கல்லூரியை மாற்றிக் காட்டுவது, ஆராய்ச்சித் தலைப்பை வெவ்வேறாகக் கொடுப்பது என இவர்கள் அனைத்திலும் முறைகேடு செய்தாலும் பிறந்த தேதியில் இவர்களால் மாற்றம் செய்ய முடியவில்லை.

இதை முறைப்படுத்தவே எங்களுக்கு நிறைய நாள்கள் எடுத்தது. ஆரம்பத்தில் ஏதோ 5 முதல் 10 பேராசிரியர்கள் தான் இப்படி இருப்பார்கள் என நாங்கள் நினைத்தோம். ஆனால் கிடைத்த தகவல்களில் நாங்கள் ஆராயும்போது நூற்றுக்கும் மேல் சென்றதும் அதிர்ச்சியாகிவிட்டது. எப்படி இத்தனை பேராசிரியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு இருக்க முடியும் என ஏறத்தாழ 475 கல்லூரிகளில் எடுத்த தகவல்களின்படி 353 பேராசிரியர்கள் 972 இடங்களில் பணிபுரிகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல் தெரிய வந்தது. நாம் கொடுத்த தகவல்களில் யாரும் விருந்தினர் விரிவுரையாளர்களோ, பகுதிநேர ஊழியரோ கிடையாது. அனைவருமே முழுநேரப் பணியாளர்கள். ஒரு முழுநேரப் பணியாளர் ஒரு நேரத்தில் ஒரு கல்லூரியில் தான் பணிபுரிய முடியும். எவ்வாறு 353 பேராசிரியர்கள் 972 இடங்களில் ஒரே நேரத்தில் பணிபுரிய முடியும்? எனவே இது மிகப் பெரிய முறைகேடு என இதைத் தீவிரமாகப் பின் தொடர்ந்தோம்.

அண்ணா  பல்கலைக்கழகத்தில் தகுதியற்ற ஆசிரியர்களைக் கண்டறிய எந்த அமைப்பும் இல்லையா? இருக்கும் எனில் அவர்களுக்குத் தெரியாமல் இந்த முறைகேடு நடந்திருக்குமா? அல்லது இந்த முறைகேட்டில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் பங்கு இருக்கிறதா?

நிச்சயமாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இதில் தொடர்பு இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை. காரணம் அண்ணா பல்கலைக்கழக ஆய்வுக் குழுவின் வேலையே கல்லூரி உரிய உள்கட்டமைப்புடன் இருக்கிறதா, போதிய தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் இருக்கிறார்களா என்ற தகவல்களை ஆய்வு செய்வதுதான். இவர்கள் இந்த விதிமுறைகளைக் கடைப்பிடித்திருந்தாலே நிறைய தகுதியற்ற கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும். தகுதியற்ற கல்வி தரப்படுவதைத் தடுத்து இருக்கலாம். ஆய்வுக் குழு கல்லூரிகளுடன் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது நாங்கள் எடுத்த ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் தணடிணுதஞு ஐ’ஞீ இருக்கும். இதை வலைதளங்களில் உள்ளீடு செய்து இருந்தாலே இவர்கள் வேறு எந்தக் கல்லூரிகளில் பணிபுரிகின்றனர் எனத் தெரிய வந்து இருக்கும். இதை ஆய்வு செய்து இருந்தாலே இந்த முறைகேடு நடந்திருக்காது. இது மட்டுமன்றி அவர்கள் சான்றிதழ்களைச் சரிவர ஆய்வு செய்திருந்தாலே இந்த முறைகேட்டைக் கண்டறிந்து இருக்கலாம். இவை அனைத்தும் தான் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் இதில் பங்கு இருக்குமோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியது.

ஒரே நாளில் ஒரு ஆசிரியர் இரண்டு
பல்கலைக்கழகத்திலும்இருந்ததாகத் தகவல்களில் கூறப்பட்டுள்ளது.
இதே போல் பதினோரு ஆசிரியர்கள் ஒரே நாளில் இரண்டு
கல்லூரிகளில் இருந்ததாகத் தகவல்கள் உள்ளன.

   இதேபோல் மற்றொரு நிகழ்வு அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வுக்குழு கோவையிலும்             இன்னொரு குழு ராமநாதபுரத்திலும் ஒரே நபரைக் கண்டதாகக் கூறியுள்ளனர். ஒரே நாளில் ஒரு             ஆசிரியர் இரண்டு பல்கலைக்கழகத்திலும் இருந்த தாகத் தகவல்களில் கூறப்பட்டுள்ளது. இதே போல்     பதினோரு ஆசிரியர்கள் ஒரே நாளில் இரண்டு கல்லூரிகளில் இருந்ததாகத் தகவல்கள் உள்ளன.             இவை    அனைத்தையும் பார்க்கும்போது தான் ஆய்வுக் குழு கல்லூரிகளுக்குச் சென்று அனுமதி வாங்கினார்களா அல்லது கல்லூரிகளுடன் இணைந்து போலியாக அனுமதி வழங்கினார்களா என்ற கேள்வி எழுகிறது. 900 கல்லூரிகளில் தான் போலியாகப் பேராசிரியர்களைக் கணக்குக் காட்டி இருக்கிறார்கள் என்று கருதினோம். ஆனால் துணைவேந்தர் ஏறத் தாழ 2000 கல்லூரிகளில் இதே போல் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளது எனக் கூறியுள்ளார். நாள்கள் செல்லச் செல்ல இன்னும் நிறைய கல்லூரிகளில் இந்த முறைகேடு நடந்திருப்பது தெரிய வருகிறது.

இந்த முறைகேடுகளைக் கண்டறிவதில் இப்போதுள்ள அமைப்பு முறை தோல்வியடைந்து விட்டதா? இன்னும் யார்? யார்? இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது?

இதை நாம் அமைப்பின் தோல்வியாகப் பார்க்க முடியாது. மாறாக இந்த அமைப்பை இவர்கள் தங்களுக்கு ஏற்றார் போல் வளைத்துக் கொண்டதே இந்த முறைகேட்டிருக்கான காரணம். கல்லூரிகள், ஆசிரியர்கள், ஆய்வுக் குழு ஆகியோர் இந்தக் கூட்டுச் சதியில் ஈடுபட்டு உள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை தான் அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொள்ள மற்ற கல்லூரிகளுக்குச் செல்கிறது. இருந்தும் கூட முறைகேடு நடைபெற அண்ணா பல்கலைக்கழகத்தின் மெத்தனப் போக்கே ஒரு முக்கியக் காரணமாக உள்ளது. இப்பொழுது இருக்கக்கூடிய துணைவேந்தருக்கு இந்த முறைகேடு பற்றி எதுவும் தெரியாது என்று கூற முடியாது. ஏனெனில் அவரே கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக அளவில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறியுள்ளார். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சூரப்பா துணைவேந்தராக இருந்த போதும் இவ்வாறான முறைகேடு நடைபெற்று நீதிமன்றமும் நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே முறைகேடு நடந்துள்ளது எனத் தெரிந்த அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை.

ஆய்வுக் குழு நிச்சயமாக இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது நமக்குத் தெரிகிறது. ஆனால் ஆய்வுக் குழுவில் இருக்கும் நபர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் நமக்குத் தெரியவில்லை. அதை ஏன் பல்கலைக்கழகம் மறைக்கிறது? அதை அழிக்க நினைக்கிறார்களா? அல்லது மாற்ற நினைக்கிறார்களா? என்ற கேள்வி எழுகிறது. விசாரணைக் குழு அமைத்து இந்த முறைகேட்டை விசாரணை செய்தாலே இந்த முறைகேட்டிற்குப் பின்னால் யார் யாரெல்லாம் உடந்தையாக இருந்தனர் என்று தெரியவரும். ஆசிரியர்களும் கல்லூரிகளும் ஆய்வுக் குழுவும் யாருடைய தொடர்பு மின்றி இதைச் செய்திருக்க வாய்ப்பில்லை. பெரும்பாலான அரசியல் பிரமுகர்கள் நடத்தக்கூடிய கல்லூரிகளில் இந்த முறைகேடு நடைபெற்று உள்ளது.

எந்த அளவிற்கு இந்த முறைகேடு நடைபெற்றிருப்பதாக எண்ணுகிறீர்கள்?

UNIQUE ID தான் ஒரு பேராசிரியர் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளாரா இல்லையா என்பதைக் கண்டறியப் பயன்படும். நமக்குக் கிடைத்த தகவலின் படி கடந்த ஆண்டு மட்டும் 47,800 பேராசிரியர்கள் இருக்கிறார்கள்.


இதில் 13,891 நபர்கள் இந்த UNIQUE ID வழங்காமல் இருக்கிறார்கள். நான்கு நபர்களில் ஒருவர் இந்த UNIQUE ID வழங்காமல் இருக்கிறார்கள். இந்த 13,891 நபர்கள் உண்மையில் அங்கு பணி புரிகிறார்களா இல்லையா என்ற கேள்வி எழுகிறது. உண்மையில் பணிபுரிகிறார்கள் எனில் அவர்கள் ஐஈ தந்திருக்க வேண்டும் அல்லவா. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஏறத்தாழ 14,000 வேலை வாய்ப்புகளை இவர்கள் மறுத்திருக்கிறார்கள். AICTE வலைதளத்தில் 12,500 நபர்களின் தகவல்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு ஒரு பக்கம் 13,891 நபர்களுக்கு ஐஈயே இல்லை. மறுபுறம் AICTEயில் 2500 நபர்களின் தகவல்கள் மட்டுமே உள்ளன. இதில் எதை நாம் உண்மையென நம்புவது?

இந்த முறைகேடு சமூகத்தில் எந்தவிதமான பாதிப்பை ஏற்படுத்தும் என நினைக்கிறீர்கள்? இவ்வாறான முறைகேடு வருங்காலங்களில் நடப் பதைத் தடுக்க எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?

இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 353 பேராசிரியர்களில் 175 நபர்கள் முனைவர் பட்டம் வாங்கியவர்கள். இவர்கள்தான் துøறயின் தலைவர்களாக இருப்பார்கள். இவர்களே போலியாக இருக்கும் பட்சத்தில் எத்துணை துறைகள் தகுதியற்றதாகச் செயல் பட்டுக் கொண்டிருக்கும். நமக்குச் சில மாணவர்கள் அலைப்பேசியின் மூலமாக அவர் களின் கல்லூரியில் முறையாக வகுப்புகள் நடத்தப்படுவதில்லை, ஆசிரியர்கள் வகுப்புக்கு வருவதில்லை, ஆய்வுக்கூடப் பாடங்கள் எடுப்பதில்லை என வருத்தத்துடன் தெரிவித்தனர்.  இவ்வாறான சூழலில் இவர்கள் தேர்வை எப்படி நடத்தி இருப்பார்கள்? இந்தக் கல்லூரிகளால் எவ்வாறு தகுதி வாய்ந்த மாணவர்களை உருவாக்க இயலும்?

இவர்களின் சுய லாபத்திற்காகத் தகுதியற்ற கல்லூரிகளிலிருந்து தகுதியற்ற மாணவர்களைத் தயார்படுத்துவதினால் சமூகத்தில் வேலை வாய்ப்பின்மை அதிகரிக்கும். வேலை வாய்ப்பு இல்லாமல் இவர்கள் கிடைக்கும் வேலைக்குச் செல்லும் அவல நிலையும் ஏற்படும். தற்கொலை செய்து கொள்ளக்கூடிய நிலைமை ஏற்படும். மாறாக நாம் முறையான கல்வியை வழங்கியிருந்தால் நிறைய தொழில் அதிபர்களையும் ஆய்வு மாணவர்களையும் உருவாக்கி இருக்கலாம். இந்த முறைகேட்டை உயர் கல்வித் துறையில் நடத்தப்பட்ட ஒரு தாக்குதலாகத் தான் பார்க்கின்றோம். அரசு உரிய நடவடிக்கையை உடனே எடுத்திருக்க வேண்டும். இது மக்களுக்குப் பொருளியல் கல்லூரிகளின் மீது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவரைக்கும் பொறியியல் கல்லூரிகளில் மட்டும் இந்த அளவுக்கு முறைகேடு நடந்திருக்கும் எனில் இன்னும் மருத்துவக் கல்லூரிகளிலும், கலை, அறிவியல் கல்லூரிகளிலும் எந்த அளவுக்கு முறைகேடு நடந்திருக்கும் என்ற ஐயம் எழுகிறது. அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூடிய விரைவில் ஆசிரியர்களின் தகவல்களை வெளியிடுவதாகக் கூறியுள்ளார். மக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பினாலே இவ்வாறான முறைகேடு நடப்பதைத் தடுக்க முடியும்.

900 கல்லூரிகளில் தான் போலியாகப் பேராசிரியர்களைக் கணக்குக் காட்டி
இருக்கிறார்கள் என்று கருதினோம். ஆனால் துணைவேந்தர்
ஏறத்தாழ 2000 கல்லூரிகளில் இதே போல்
முறைகேடு நடந்திருக்க வா#ப்புள்ளது எனக் கூறியுள்ளார்.

மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேரும் பட்சத்தில் எவ்வாறான விழிப்பு உணர்வுடன் இருக்கவேண்டும்? தாங்கள் படிக்க விரும்பும் கல்லூரியில் ஏதாவது முறைகேடு நடந்திருக்கிறதா என அறிய வழி இருக்கிறதா?

நிச்சயமாக மாணவர்களுக்கும் விழிப்பு உணர்வு தேவை இருக்கிறது. முதலில் நாம் சேரக்கூடிய கல்லூரி பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். பின்னர் நாம் தேர்ந்தெடுக்கக்கூடிய துறையில் எத்தனை பேராசிரியர்கள், துணைப் பேராசிரியர்கள், துறைத் தலைவர் உள்ளனர் என்ற தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். உள்கட்டமைப்பு, பேராசிரியர்கள் எண்ணிக்கை SSR (or) SFR 1:2:6 என்ற விகிதத்தில் இருக்கிறதா என்று பார்த்தே கல்லூரியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். TIER 1 கல்லூரிகளில் பெரும்பாலும் இந்த முறைகேடுகள் நடைபெறவில்லை. TIER 2,3 கல்லூரிகளிலே பெரும்பாலும் இந்த முறை கேடுகள் நடைபெற்றுள்ளன எனினும் கூடிஞுணூ1 கல்லூரிகளாக இருந்தாலும் அதøனயும் ஆய்வு செய்து சேருங்கள். கல்லூரி முடித்தவுடன் நாம் 1000 ரூபாய் செலுத்தவில்லை என்றால் நம் சான்றிதழைத் தர மறுக்கிறார்கள் அல்லவா அதைப் போல் மாணவர்களும் கல்லூரி களில் சேரும் முன் அனைத்தும் சரியாக உள் ளதா என்பதைப் பார்த்துச் சேர வேண்டும். 

                                                                                                                                                   நேர்காணல்:Riyas Mohideen k

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர நேர்காணல்

மேலும் தேடல்