மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

அத்தனையும் அவதூறுகள் ஒன்றுகூட உண்மையில்லை
M.அப்துல் μஞீமான், அக்டோபர் 01-15


 

 மூன்றாண்டு வக்ஃப் வாரியப் பணி களை எப்படி உணர்கின்றீர்கள்?


வக்ஃப் வாரியத் தலைவர் பொறுப்பை நான் ஏற்றபோது கடந்த காலங்களில புரையோடிப் போயிருந்த பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று விரும்பினேன். அதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அல்லாஹ்வுக்கு அஞ்சியவனாக எந்த பாரபட்சத்திற்கும் இடமில்லாமல் மிகவும் நேர்மையாகச் செயல்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அரசியலில் இதுவெல்லாம் சகஜம் என்று சொல்லி இந்தப் பொறுப்பில் இருந்து ஒரு பைசாவை எடுத்திருந்தாலும் அது ஹராம் என்று பள்ளிவாசலில் மிம்பருக்கு அருகில் நின்று உறுதி எடுத்தேன்.


நான் பொறுப்பில் இருந்த சமயத்தில் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியவில்லை என்றாலும் கூட நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருந்த பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டுள்ளோம். அப்படித் தீர்வு காணும் போது ஒரு சாரார் போற்றுவதும் மற்றொரு சாரார் தூற்றுவதுமான நிகழ்வுகள் நிறைய நடந்திருக்கின்றன. இவ்வளவு காலமாகத் தொடர்ச்சியாக வக்ஃப் சொத்துகளை முறைகேடாக அனுபவித்துக் கொண்டிருந்தவர்கள்மீது  நடவடிக்கை எடுக்கும்போது ஆத்திரத்தில் என்மீது அவதூறு சொல்வது தொடர்கதையாகி விட்டது.


 இந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை நடவடிக்கைகள் எடுத்து இருப்பீர்கள்?


20 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து மிகவும் மோசமாகப் புரையோடிப் போயிருந்த நிர்வாகக் கோளாறுகளுள்ள ஏறத்தõழ அறுபதுக்கும் மேற்பட்ட நிர்வாகங்களைச் சீரமைத்து இருக்கிறோம். இவ்வாறு சீரமைக்கும் பொழுது அதற்கு நீதிமன்றத்திற்குச் சென்று ஸ்டே வாங்குவது அல்லது வக்ஃப் போர்டுக்கு எதிராக வழக்குத் தொடர்வதால், உடனடித் தீர்வுக்கு வர முடியாமல் வழக்குகளால் தொங்கி கொண்டிருக்கின்ற பிரச்னைகளும் ஏராளமாக இருக்கின்றன.


 மூன்றாண்டுகளில் குறிப்பிடும்படியான மாற்றங்கள் எதுவும் வக்ஃபோர்டில் நிகழ்ந்துள்ளனவா?


இத்தனை ஆண்டு காலமாக கணினிமயம் ஆக்கப்படாமல் இருந்த வக்ஃப்போர்டு செயல்பாடுகள் அனைத்தையும் கணினிமயமாக்கி உள்ளோம். இதனால் ஒவ்வொரு முத்தவல்லியும் நேரில் வந்து தான் புகாரளிக்க வேண்டும் என்ற நிலை மாறி கணினி மூலமாகவே புகாரளிக்கும் முறையைக்  கொண்டுவந்துள்ளோம். கணக்கு, நடைமுறைகளை நவீனப்படுத்தியிருக்கிறோம். நாங்கள் செய்ததிலேயே மிகப்பெரிய வேலை என்னவென்றால் 1958 சர்வே கமிஷ்னரேட் என்று சொல்லக் கூடிய
அரசாங்க நில அளவீட்டாளர்களால் நாடு முழுவதும் எடுக்கப்பட்ட சர்வேவிற்குப் பிறகு ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுதுதான் சர்வே எடுக்கப்
படுகிறது. தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்புடன் 30 நவீன சர்வே கருவிகளைக் கொண்டு, ட்ரோன் மூலம் 30 நில அளவீட்டாளர்களைக் கொண்டு தமிழ்நாடு முழுவதுமாக இப்போது நில அளவீட்டுப் பணி நடைபெற்று வருகிறது.


சரியான  நடவடிக்கைகளைச்  சட்டரீதியாக எடுப்பதற்குத் தோதுவாக  ஓய்வு பெற்ற இரண்டு நீதிபதிகளைப் பணி யமர்த்தி உள்ளோம். அவர்களுடைய நேரடிக் கண்காணிப்பில்தான் ஒவ்வொரு சட்ட நடைமுறைகளும் செயல்பாட்டிற்கு வரவேண்டும் என்ற வகையில், இப்பொழுது நாம் ஒரு வழக்குத் தொடுக்க வேண்டும் என்றாலும் அல்லது நம் மீது தொடுக்கப்பட்ட வழக்காக இருந்தாலும் நம்மிடத்தில் இருந்து செல்லக்கூடிய அஃபிடவிட் ஸ்டேட்மென்ட் எல்லாம் அந்த இரண்டு ஓய்வு பெற்ற நீதிபதி
களுடைய கவனத்திற்குச் செல்ல வேண்டும் என்ற வகையிலே சீர்படுத்தி இருக்கிறோம்.


வக்ஃப் வாரியத்திற்கு வரவேண்டிய சகாயத் தொகை 7 விழுக்காடு மிகக்குறைவாக இருந்தது. இதனால் வாரியச் செலவுகளை முழுமையாகப் பார்க்க முடியாமல் அரசாங்கத்திடமிருந்து மானியம் பெற்றுத் தான் செய்ய வேண்டும் என்ற நிலை இருந்தது. இப்போது இந்தக் கலக்ஷனை ணீணூணிஞிஞுஞீதணூஞு ணீணூணிணீஞுணூ ண்தூண்tஞுட் உருவாக்கி நாடு முழுவதும் கலக்ஷன் செய்தபோது அதனை மூன்றரைக் கோடியிலிருந்து 10 கோடியைத் தாண்டக்கூடிய அளவில் உயர்த்தி இருக்கிறோம்.
வருமானம் இல்லாத பல்வேறு பள்ளி வாசல்களுக்கு மராமத்துப் பணிகள் செய்வதற்காகத் தொடக்கத்தில் அரசாங்கத்திடமிருந்து நான்கு கோடி, ஐந்து கோடியாக இருந்த அரசாங்கத்தின் மானியத்தை இப்போது 10 கோடியாக உயர்த்தித் தருவதற்கு நாம் வேண்டுகோள் விடுத்து அது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இந்த ஆண்டு 10 கோடி வழங்கப்பட்டது.


விண்ணப்பம்  செய்யப்பட்டிருந்த, தேவைப்படும் பள்ளிவாசல்களுக்கு நாம் இதைப் பிரித்துக் கொடுத்திருந்தோம். இதுவும் போதவில்லை. கழிவறை கட்டுவதற்கு 30 இலட்சம் தேவைப்படுகிறது என்றால் நம்மால் 15 இலட்சம் தான் தர முடிகிறது. அதற்கான தொகை பள்ளிவாசல்களில் இல்லை என்றாலும் கூட அங்கு இருக்கும் ஜமாஅத்தார்களிடமும் மக்களிடம் வசூல் செய்து அந்தக் கட்டுமானத்தைக் கட்டிக் கொள்வது உண்டு. ஆனால் எல்லா ஊர்களிலும் இந்த வாய்ப்புக் கிடையாது. அப்படிப்பட்ட ஊர்களில் எல்லாம் சரியாகக் கணக்கிட்டு இந்த மூன்று ஆண்டுகளிலே பல்வேறு சீரமைப்புப் பணிகளைச் செய்துள்ளோம். வாரம் ஒருமுறை நேரடியாக வக்ஃப் வாரியத் தலைவரை அலுவலகத்தில் சந்திக்கும் நடைமுறையை உருவாக்கினோம்.


உங்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்களே...!


தொடக்கத்திலிருந்து நான் எதற்கும் அஞ்சாமல் அல்லாஹ்விற்கு அஞ்சியவனாகச் செயல்பட்டுள்ளேன். இதனால் பல எதிர்ப்புகள் வந்ததும் உண்மைதான். சீரற்ற நிர்வாகத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்போது அதனால் பாதிக்கப்பட்டவர்கள், நமக்கு எதிராக அவதூறுப் பரப்புரைகளைக் கையிலெடுத்தனர். ஆனால் அவர்களால் எதையும் நிரூபிக்க முடியவில்லை. நான் பணக்காரர்களுக்குத் துணையாக இருக்கிறேன், வேண்டிய நண்பர்களுக்கு அல்லது கட்சிக் காரர்களுக்கு உடந்தையாக இருக்கிறேன் எனப் பொத்தம் பொதுவான குற்றச்சாட்டுகளை வைக்க முடிந்ததே தவிர குறிப்பிட்டு இதுதான் நீங்கள் செய்த தவறு என்று ஒருமுறை கூட ஒருவர் கூட என் முன்னால் வந்து சொன்னது கிடையாது.


இந்தத்  தவறை நீங்கள் செய்திருக்கின்றீர்கள் என என்னிடத்தில் விரல் நீட்டிச் சொன்னால் உண்மையிலேயே  அது நடந்திருந்தால்  அதை திருத்துவோம் அது நடக்க வில்லை என்றால் அதற்கு விளக்கம் கொடுப்போம். நான் பல முறை வேண்டுகோள் வைத்தும் கூட இதுவரைக்கும் ஒரு நபர் கூட என் முன்னால் வந்தது கிடையாது.


 ஆனால் உங்கள் மீது வழக்குத் தொடுத்திருக்கின்றார்களே..!


தேசியக்கொடியை நான் அவமானப்படுத்தினேன் என்ற வழக்கு ஒன்றைத் தொடுத்தார்கள். ஒருமுறை உம்ராவுக்குச் செல்லும்போது துபாயில் இறங்கி வேறு விமானத்தில் சென்றதைக் கூட இவர் துபாய்க்குப் போனது சட்டத்துக்குப் புறமானது என வழக்குத் தொடுத்தனர். அந்த வழக்கு தள்ளுபடியானதுடன் நீதிபதியே, ‘நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயல்’ எனக் கண்டித்துள்ளார்.

சீரற்ற நிர்வாகத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்போது அதனால் பாதிக்கப்பட்டவர்கள், நமக்கு எதிராக அவதூறுப் பரப்புரைகளைக் கையிலெடுத்தனர்.


வக்ஃப் வாரியத் தலைவராக வாரிய நடவடிக்கைகளில் என்ன குற்றம் செய்தேன் என்று யாரும் வழக்குத் தொடுக்கவில்லை. மாறாக என்மீது அவதூறு சுமத்தியவர்கள் மீது நான் தான் வழக்குத் தொடுத்துள்ளேன். அவர்கள் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார்கள். இவை நீதிமன்றத்தின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. OA 192, 2024, OA 6356, 2023, இந்த இரண்டு எண்களையும் இணையதளத்தில் தேடிப் பார்த்தால் கூஞுணஞீஞுணூடிணஞ் தணஞிணிணஞீடிtடிணிணச்டூ ச்ணீணிடூணிஞ்தூ, அவர்கள் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுச் சென்றதை நீங்கள் பார்க்க முடியும்.


மூன்று ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதாகச் சொல்கின்றீர்கள். பின்னர் ஏன் இராஜினமா செய்யவேண்டும்? இல்லை இராஜினமா செய்ய நிர்பந்தப்படுத்தப்பட்டீர்களா?


பல சிறப்பான பணிகளை நாங்கள் முன்னெடுத்தாலும் பல  காரியங்களைத் தொடர்ந்து செய்ய முடியாத அளவுக்குத் தடைகளும் வந்தன. சீர்திருத்த நடவடிக்கைகளில் நாம் செய்த பல காரியங்களைத் தொடர்ந்து செய்வதற்குப் பெரும் சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. தொடர் பிரச்னைகள், தொந்தரவுகள், இடையூறுகள் வரும் பொழுது தொடர்ந்து இந்தப்பணிகளிலே இருக்க முடியுமா என்று ஒரு கட்டத்தில் தள்ளப்பட்டேன்.


இது தொடர்பாக என்னைக் குறித்த அவதூறுகளை அரசாங்கத்திற்குத் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்பது அல்லது ஒரு குரூப் பையே வைத்து பல கடிதங்களைத் தொடர்ந்து எழுதிப் போடுவது என்ற நிலைக்கு வந்தார்கள். இதன் மூலமாக அரசாங்கத்தின் கவனத்தை எப்படியாவது திருப்பி என்னை இந்தப் பொறுப்பில் இருந்து வெளியாக்கி விட முடியுமா எனத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகச் செய்து கொண்டு வருகின்றனர். இது மிக அதிகமாக, அதிகமாக நானே ஒரு முடிவுக்கு வந்தேன்.
நம்மால் வாரியத்திற்கு எந்த விதமான கடினமான சுமையை உருவாகக்கக்கூடாது. அதே நேரத்தில் அரசாங்கத்திற்கும் கடினமான சுமையை உருவாகக்கூடாது என முடிவெடுத்தேன். சீர்திருத்தப் பணிகளில் ஈடுபடுகின்ற போது போற்றுபவர்களைப் போல தூற்றுபவர்களும் அதிகரித்துக் கொண்டே இருந்தார்கள். ஒரு நல்ல பணியைச் செய்துவிட்டு இத்தனை அவதூறுகளுக்கு ஆளாக வேண்டுமா? சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் ஏராளமாக இருக்கிறது. அதிலே கவனம் சொல்லுத்தோமே என்றுதான் இராஜினமா முடிவுக்கு வந்தேன்.


 வாரியப் பணிகளில் அரசின் குறுக்கீடு, அழுத்தங்கள் இருந்தனவா?


நான் இந்தப் பொறுப்பில் இருந்தவரைக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ‘வக்ஃப் வாரியப் பணிகளில் சீர்திருத்த நடவடிக்கைகளை நீங்கள் முன்னெடுக்க வேண்டும். அதற்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும். அரசு தரப்பில் எந்தக் குறுக்கீடும் இருக்காது. துணிச்சலாக நீங்கள் செயல்படுங்கள்’ என்று எனக்கு உற்சாகத்தை  ஊட்டினார்கள். வாரியத்தின் செயல்பாட்டிற்கு நாங்கள் என்னென்னவெல்லாம் தமிழ்நாடு அரசிடம் கேட்டோமோ அவை அனைத்தையும் நிறைவேற்றித் தந்தார்கள். தமிழ்நாடு முழுவதும் வக்ஃப் நிலங்களின் சர்வே ட்ரோன் மூலமாக இரண்டு ஆண்டுகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஓய்வு பெற்றநீதிபதிகளை சட்டப் பணிகளுக்காக நியமிக்கக் கோரினோம். நியமித்தார்கள். கணினி மயமாக்குவதில் ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

 

வக்ஃப் வாரியத் தலைவராக வாரிய நடவடிக்கைகளில் என்ன குற்றம் செய்தேன் என்று யாரும் வழக்குத் தொடுக்கவில்லை. மாறாக என்மீது அவதூறு சுமத்தியவர்கள் மீது நான் தான் வழக்குத் தொடுத்துள்ளேன்.

 


நம் சமுதாயத்திலிருந்தும் இதுபோன்ற முழு ஒத்துழைப்புக் கிடைத்தால் வாரியப் பணிகளை முழுமையாகச் செய்திருக்க முடியும். நான் ஒட்டுமொத்த சமுதாயத்தை யும் சொல்லவில்லை. சீர்திருத்த நடவடிக்கை எடுத்து வாரியம் நேரடி நிர்வாகத்தைக் கையிலெடுக்கும்போது தவறு செய்தவர்கள் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் பக்கம் நியாயம் இருந்தால் வாரியக்கவுன்சில், நீதிமன்றங்களுக்குச் சென்று முறையிடலாம். ஆனால் சட்ட ரீதியான அணுகுமுறைகளை விட்டுவிட்டு அவதூறுகளில் இறங்கிவிட்டார்கள். இது வலையுகம். என்னைப் பற்றி வைக்கக்கூடிய குற்றச்சாட்டுகளை என்னை அறிந்தவர்கள் இது அவதூறு எனப் புரிந்து கொள்வார்கள். ஆனால் பொதுமக்கள் அதனை எளிதில் நம்பிவிடுகின்ற அபாயமும் இருக்கிறது.


என் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவதும், நல்ல காரியம் செய்யப்போய் பகையைச் சம்பாதிப்பதும் போதும் என்ற நிலைக்கு வந்துதான் நான் என்னை விடுவிக்கக் கோரி முதலமைச்சரிடம் கடிதம் கொடுத்தேனே தவிர யாருடைய அழுத்தமும், நிர்பந்தமும் எனக்குப் பணிக்காலத்திலும் இல்லை. விடுவிப்பிலும் இல்லை.


(அடுத்த இதழில் முடியும்)



சந்திப்பு :
வி.எஸ்.முஹம்மத் அமீன்





உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர நேர்காணல்

மேலும் தேடல்