பொதுவாக இஸ்ரேலியர்கள் ஃபலஸ்தீனர்களுடன் ஒன்றி உறவாட மாட்டார்கள். அதற்கு நேர் மாற்றமாக, ஃபலஸ்தீன பகுதிகளில் தன்னுடைய நேரங்களைச் செலவிடுவதுடன் அரபு மொழியைத் தெரிந்து கொள்ளவதற்காக அரபு பாடங்களைக் கற்றுக் கொண்டவர் இஸ்ரேலிய வரலாற்று ஆசிரியர் இலான் பப்பே. 70 வயதாகும் பப்பே தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை ஃபலஸ்தீன உரிமைகளுக்காகப் போராடி வருபவர். டென்மார்க் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்ற வந்த இலான் பப்பேயிடம் அல்ஜஸீரா தொலைக்காட்சி எடுத்த நேர்காணல்.
1948இல் தொடங்கிய வேலையை முடிக்க ஜியோனிஸத்தின் புதிய தலைமை செய்யும் முயற்சி இது. அதாவது வரலாற்று ரீதியிலான ஒட்டுமொத்த ஃபலஸ்தீனத்தை அதிகாரப்பூர்வமாகக் கைப்பற்றுவதன் மூலம், முடிந்தவரை பல ஃபலஸ்தீனர்களை வெளி யேற்றி இஸ்ரேலின் அண்டை நாடுகள் குறித்த எந்த ஒரு பயமோ, மதிப்புமற்ற ஒரு புதிய இஸ்ரேலியப் பேரரசை உருவாக்குவதன் மூலம் வரலாற்று ரீதியிலான ஃபலஸ்தீனின் எல்லைகளுக்கு அப்பால் பிராந்திய ரீதியாகத் தன் ஆதிக்கத்தைப் பயன்படுத்தி விரிவடைய முடியும்.
வரலாற்று ரீதியாக, ஜியோனிஸத்தின் இறுதிக்கட்டம் இது என்று நான் எச்சரிக்கையுடன் சொல்லத் தயாராக இருக்கிறேன். வரலாற்று ரீதியாக, கருத்தியல் இயக்கங்களின் (அவை காலனியாக, பேரரசுகளாக இருந்தாலும் சரி) வளர்ச்சிகள் இறுதிக் கட்டத்தை அடையும் பொழுது, தன்னுடைய இலட்சியத்தை அடைய அவசரம் காட்டுவதாகவும், கொடூரமாக, இரக்கமற்ற முறையில் அதனை அடையும் விதமாகவே இருக்கும். ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாகி அவை சரிந்து, வீழ்ச்சியைத் தான் சந்திக்கும்.
டிரம்பின் இரண்டாவது பதவிக் காலத்தில், எலான் மஸ்க் உடன் அவர் கொண்ட தொடர்பில் இருந்து நேர்மறையான, சாதகமான எதையும் எதிர்பார்ப்பது மிகவும் கடினம். இஸ்ரேலிய, ஜியோனிஸத்தின் எதிர்காலம் அமெரிக்காவின் எதிர்காலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து அமெரிக்கர்களும் ட்ரம்பை ஆதரிப்பவர்கள் என்று நான் நினைக்கவில்லை. அதே நேரத்தில் எல்லா அமெரிக்கர்களும் எலான் மஸ்கின் ஆதரவாளர்கள் என்றும் நான் நினைக்கவில்லை. ஆனால் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் அவர்களால் செய்யக்கூடியது அதிகம் இல்லை என்று நான் அச்சப்படுகிறேன். இதில் இருக்கும் ஒரே நல்ல செய்தி என்னவென்றால், அமெரிக்க அதிப ராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் போன்ற பிரபலமான தலைவர்களும், எலான் மஸ்க் போன்ற பைத்தியக்காரர்களும் எந்த விதத்திலும் தகுதியானவர்கள் அல்ல. அவர்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தையும், அமெரிக்க சர்வதேச நிலைப்பாட்டையும் வீழ்த்தப் போகிறார்கள். எனவே இந்த வகையான ஆளுமைகள் அதை வழி நடத்தப் போகிறார்கள் என்றால் அது அமெரிக்காவிற்குப் பாதிப்பையும், மோசமான நிலையையும் தான் தரும்.
நீண்ட காலத்தைக் கணக்கில் வைத்துப் பார்த்தால், இது மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஈடுபாட்டைக் குறைக்க வழிவகுக்கும் என்று நான் நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை மத்திய கிழக்கில் அமெரிக்காவின் குறைந்தபட்ச ஈடுபாடு என்பது ஒரு சாதகமான சூழ்நிலையைத்தான் தரும். ஃபலஸ்தீனுக்கு மட்டுமல்ல, முழு அரபு உலகத்திற்கும் சர்வதேசத் தலையீடு தேவைப்படுகிறது.
ஆனால் அது உலகளாவிய தெற்கத்திய வளர்ந்த நாடுகளிலிருந்து (Global South Countries) வர வேண்டும். வடக்கத்திய வளர்ந்து வரும் நாடுகளிலிருந்து (Global North Countries) அல்ல. உலகளாவிய வடக்கத்திய நாடுகளிலிருந்து எவரையும் ஒரு நேர்மையான தரகராக மிகச் சிலரே கருதும் அளவுக்கு, உலகளாவிய வடக்கு நாடுகள் அத்தகைய பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளது.
நான் வர இருக்கும் குறுகிய காலத்தைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறேன். நான் சொல்வது தவறாகப் புரிந்து கொள்ளப் படவும் விரும்பவில்லை. நமக்குக் காத்திருக்கும் குறுகிய காலப் பேரழிவுகளைத் தடுத்து நிறுத்தும் எந்த சக்தியையும் என்னால் இப்போதைய நிலையில் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. நான் ஒரு பரந்த கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, நாம் மனிதகுலத்தின் ஒரு மோசமான அத்தியாயத்தின் தொடக்கத்தில் அல்லாமல், அந்த அத்தியாயத்தின் முடிவில் இருக்கிறோம் என்று நினைக்கிறேன்.
எனக்குத் தெரியாது. ஆனால் இனப்படுகொலையின் காரணமாக வாய்ப்புக் கேடாக ஃபலஸ்தீனில் போர் நிறுத்தம் கூட முடிவல்ல என்று நான் நினைக்கிறேன். அது தடுக்கப்படா விட்டாலும், குறைந்தபட்சம் அதை அடக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ போதுமான சக்தி இருக்கும் என்று நம்புகிறேன்.
நீண்ட கால நோக்கில் பார்த்தால், நீண்ட ஒரு செயல்முறையை என்னால் பார்க்க முடிகிறது. நான் வர இருக்கும் 20 ஆண்டுகள் பற்றித்தான் பேசிக்கொண்டு இருக்கிறேன். ஆனால் நாம் இந்த நீண்ட செயல்முறையின் தொடக்கத்தில் தான் இருக்கிறோம் என்றே நான் நினைக்கிறேன். இது குடியேற்றவாசிகளின் காலனித்துவத் திட்டத்தைக் காலனித்துவ நீக்கம் செய்யும் ஒரு செயல்முறை. அது எப்படி வேண்டுமானாலும் போகலாம் என்பதை நாம் வரலாற்றிலிருந்து அறிகிறோம். காலனித்துவ மயமாக்கலின் நீக்கம் என்பது மிகவும் வன்முறையாக இருக்கலாம்
ஆனால் இது ஒரு சிறந்த ஆட்சியை உருவாக்க வேண்டிய அவசியமில்லை அல்லது இது அதை விட மிகவும் சிறந்த ஒன்றை உருவாக்க ஒரு வாய்ப்பாக இருக்கலாம்.சம்பந்தப்நிறுவனங்களின் அதிகாரம், ஃபாசிஸத்தின் எழுச்சி, ஐரோப்பாவில் புதிய வலதுசாரி ஃபாசிஸம், சில அரபு நாடுகளில் ஊழலின் நிலை முடிவில் நாம் இருக்கிறோம் இவை அனைத்தும் இஸ்ரேலைத் தான் செய்வது சரியென்று செய்ய அனுமதிக்கும் ஓர் உலகளாவிய கூட்டணியை நிலை நிறுத்தும் செயல்படுகின்றன. விதத்தில் ஆனால் இதையும் தாண்டி, மற்றொரு கூட்டணியும் உள்ளது. இந்தக் கூட்டணி அதே அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் அது அதிகமாகப் பரவி இருக்கிறது. அநீதிக்கு எதிரான பட்ட அனைவருக்கும், இந்த ஒட்டு மொத்த பகுதிக்கும் என இருவருக்குமே வெற்றி என்ற அடிப்படையிலும் அமையலாம்.
சரி தான். வரலாற்றுக் கண்ணோட்டத்தில் இறுதிக் கட்டம் என்பது ஒரு நீண்ட செயலாக்கம் ஆகும். இது உடனடியாக ஏற்படும் ஒரு செயலாக்கம் அல்ல. அது நடக்குமா என்ற கேள்வியைத் தாண்டி, அது எப்போது நடக்கும் என்பதுதான் முக்கியமான கேள்வி. நிச்சயமாக அதற்குக் கொஞ்சம் காலம் ஆகலாம். இந்தக் கட்டத்தைத் தொடர அனுமதிக்கின்ற வகையில் முன்னேற்றங்கள் பிராந்திய, உலகளாவிய ரீதியில் உள்ளன. ட்ரம்பைப் போன்ற அரசியல்வாதிகளின் எழுச்சி, பன்னாட்டு நிறுவனங்களின் அதிகாரம், ஃபாசிஸத்தின் எழுச்சி, ஐரோப்பாவில் புதிய வலதுசாரி ஃபாசிஸம், சில அரபு நாடுகளில் ஊழலின் நிலை முடிவில் நாம் இருக்கிறோம் இவை அனைத்தும் இஸ்ரேலைத் தான் செய்வது சரியென்று செய்ய அனுமதிக்கும் ஓர் உலகளாவிய கூட்டணியை நிலை நிறுத்தும் செயல்படுகின்றன.
ஆனால் இதையும் தாண்டி, மற்றொரு கூட்டணியும் உள்ளது. இந்தக் கூட்டணி அதே அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் அது அதிகமாகப் பரவி இருக்கிறது. அநீதிக்கு எதிரான பல போராட்டங்களுடன் இணைந்தே இருக்கிறது. உடனடி எதிர்காலத்தில் அது சாத்தியமாக முடியாவிட்டாலும், சிறிது காலத்திற்குப் பிறகு, இந்த வகையான உலகளாவிய இவர்களிடையே யூத வெறுப்பு இன்னும் உணர்வு ஃபலஸ்தீனை மட்டும் மையமாகக் கொண்டிருக்காது. உலகளாவிய வெப்ப மயமாதல், வறுமை, குடியேற்றம் உள்ளிட்ட பலவற்றில் கவனம் செலுத்துகிற ஒரு சக்திவாய்ந்த அரசியல் சக்தியாக அது மாறும். அந்த மற்றொரு உலகளாவிய கூட்டணி பெறுகின்ற ஒவ்வொரு சிறிய வெற்றியும் ஜியோனிஸத் திட்டத்தை முடிவுக்கு நெருக்கமாகக் கொண்டு வரும்.
இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று இந்த நல்லெண்ணம், ஆதரவு, ஒற்றுமை, அநீதியை எதிர்த்துப் போராடுவதற்கான ஆற்றல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஓர் அமைப்பு நம்மிடம் இல்லை. இதற்கு ஒரு சரியான அமைப்பு தேவைப்படுகிறது. இந்தக் கூட்டணியில் பங்கு வகிக்கும் சில இளைஞர்கள் நல்ல காரணங்களுக்காக அமைப்புகள் பலவற்றை விரும்பவில்லை. ஆனால் உங்களுக்கு இந்த உள்கட்டமைப்பு தேவை.
இரண்டாவது விஷயம், கடந்த காலத்தில் இத்தகைய இயக்கங்கள் கொண்டிருந்த தூய்மையான அணுகுமுறையைக் கைவிட்டு விட வேண்டும். அதற்குப் பதிலாக, அடிப்படைப் பிரச்னைகளில் கூட மக்கள் உடன்படவில்லை என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும் கட்டமைப்புகளையும் கூட்டணிகளையும் உருவாக்க வேண்டும். ஆனால் ஃபலஸ்தீனில் இனப்படுகொøலயைத் தடுத்து நிறுத்துவதற்கும், காலனித் துவப்படுத்தப்பட்ட மக்களை விடுவிப்பதற்கும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இந்த புனிதமற்ற கூட்டணி தொடக்கத்திலிருந்தே இருந்தது. நீங்கள் தர்க்கரீதியாக யோசித்தால், யூத எதிர்ப்பாளர்களும் ஜியோனிஸ்டுகளும், ஐரோப்பாவைப் பொறுத்தவரை ஒரே இலக்கைக் கொண்டிருந்தனர். அவர்கள் ஐரோப்பாவில் யூதர்களைப் பார்க்க விரும்பவில்லை. ஃபலஸ்தீனில் அவர்களைப் பார்ப்பது ஜியோனிஸ இயக்கத்திற்கும் யூத எதிர்ப்பு இயக்கத்திற்கும் ஒரு நோக்கமாக இருக்கலாம்.
இப்போது புதிய வலதுசாரிகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் கருத்தொற்றுமையின் ஒரு புதிய அடுக்கு ஒன்று உள்ளது. அது தான் இஸ்லாமிய வெறுப்புவாதம். புதிய வலதுசாரிகள் இன்னும் வலுவான யூத எதிர்ப்பை (அதாவது யூத எதிர்ப்புக் கூறுகளைக்) கொண்டிருந்தாலும் அவை முக்கியமாக முஸ்லிம்கள், அரபு சமூகங்களைக் குறிவைத்திருக்கின்றன. குறிப்பாக யூத சமூகங்களைக் குறிவைக்கவில்லை.
இஸ்ரேலை உலகின் மிக முக்கியமான இஸ்லாமிய எதிர்ப்பு, அரபுகளின் எதிர்ப்பு சக்தியாக அவர்கள் பார்க்கிறார்கள். எனவே அந்த மட்டத்திலேயே அடையாளம் காணும் போக்கும் உள்ளது. ஆனால் நிச்சயமாக யூதர்கள் இது போன்ற கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்தால் இஸ்ரேலுக்கு வெளியே அவர்கள் வருத்தப்படுவார்கள். ஐரோப்பாவில் இஸ்ரேலுக்கு ஆதரவான யூதர்கள் கூட இஸ்ரேலியக் கொடியுடன் இருப்பதைப் பற்றி சற்று சங்கடமாக உணர்கிறார்கள். ஆனால் அதே நேரத்தில் நாஜி கொடியுடன் இருப்பதில் அவர்களுக்குச் சங்கடமில்லை.
இஸ்ரேலுடனான தங்களது உறவை இது மறுபரிசீலனை செய்யும் என்று நம்புகிறோம். குறிப்பாக அமெரிக்க யூத சமுதாயத்தில், இளம் தலைமுறையினரிடையே, இஸ்ரேல் இப்பொழுது அரசியல் கூட்டணியின் ஒரு பகுதியாக இருப்பதைகண்டு கொள்ளாமல் புறக்கணித்து வருஅவர்கள் புரிந்து கொண்டுள்ளனர் என்பதற்கான அறிகுறிகளை நாம் ஏற்கனவே பார்த்தோம். அதை அமெரிக்க யூதர்கள் என்ற முறையில் அவர்கள் அடையாளம் காணப்படக்கூடாது என்பதையும் பார்க்கிறோம். நாம் சொல்வது போல் ட்ரம்ப் பிரபலமான தலைவர் என்பதால் இஸ்ரேல் போரைத் தொடர அனுமதிக்கிறார். ஆனால் இது எதிர்காலத்தில் எப்பொழுதும் இருக்கும் என்றும் கூற முடியாது.
இது இஸ்ரேலில் நடக்காது. ஆனால் இஸ்ரேலுக்கு வெளியே உள்ள யூத குடும்பங்களில் நிச்சயம் நடக்கும். இளம் தலைமுறையினர் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றிக் கூட அறிந்து கொள்ள முடியாதவர்களாக இல்லை என்கிற அளவுக்குத் தகவல்கள் பெருகியுள்ளன. அவர்கள் மிக நல்ல யூதக் கல்வியைப் பெற்றிருந்தாலும், இஸ்ரவேலர்களுடைய செயல்களின் அநியாயத்தை, அட்டூழியங்களை அவர்கள் இன்னும் அதிகமாகக் காண முடியும். இது பெரும்பாலும் தலை முறைகளுக்கிடையேயான மோதலாகும். இது ஒரு சாதகமான அறிகுறியாகும். ஏனென்றால் தற்போதைய தலை முறை இந்த நிலையில் மிகவும் ஒன்று பட்டதாக இருக்கும் என்று எடுத்துக் கொள்ளலாம்.
அமெரிக்காவில் உள்ள இளம் யூதர் களுக்குக் கிடைப்பது போல, இஸ்ரேலில் உள்ள யூதர்களுக்குக் கல்வி கிடைக்க வில்லை. அவர்கள் மிகவும் (மூளைச்சலவை செய்து) போதிக்கப்பட்ட ஒரு நாட்டில் இருந்து கல்வி பெற்றனர். அவர்கள் இஸ்ரேலியக் கல்வி முறையால் தயாரிக்கப்பட்டவர்கள். இன்னும் அதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டவர்கள். நான் 1999இல் ஒரு கட்டுரை எழுதினேன். இஸ்ரேலிய பாடத்திட்டங்களை ஆராய்ந்தால், இந்தக் கல்வி அமைப்பின் அடுத்த பட்டதாரிகள் தீவிர இனவெறி பிடித்தவர்கள், தீவிரவாதிகள், அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அவர்கள் ஆபத்தானவர்கள் ஆக இருப்பார்கள் என்று அப்பொழுதே எச்சரித்தேன்.
வாய்ப்புக்கேடாக நான் சொன்னது முற்றிலும் சரியாகத் தான் அமைந்தது. இவை தொட்டிலில் இருந்து கல்லறை வரை மிகத் தீவிரப் போக்கைக் கடைப்பிடிக்கும் (மூளை சலவை செய்யப்பட்ட) சமூகம் விதைத்து அறுவடை செய்ததாகும். இந்த மக்களுக்கு மீண்டும் கல்வி புகட்ட வேண்டும். நீங்கள் அவர்களுக்கு விஷயங்களை மட்டும் காட்டி, அவர்களை மாற்றி விடலாம் என்று எதிர்பார்க்க முடியாது. இறந்து கிடக்கும் ஃபலஸ்தீனக் குழந்தைகளைப் பார்த்து ‘நல்லது, ரொம்ப நல்லது’ என்று அவர்களால் சொல்ல முடியும். மனிதநேயமற்ற தன்மை, மனிதாபிமானமின்மை என்பது இஸ்ரேலிய டி.என்.ஏ வின் ஒரு பகுதியாகும். மேலும் அவர்களுக்குக் கூடுதல் தகவல்களைக் கொடுப்பதன் மூலம் அதை எதிர்கொள்வது மிகவும் கடினம்.
ஆதாரம்: அனியல்லா சஃப்தார் அல் ஜஸீரா பத்திரிகையில் எழுதிய கட்டுரை (14-01-2025)
தமிழில் : ஜ. ஜாஹிர் உசேன்